ரிலீஸுக்கு முன்பே பல கோடிகள் - வசூலை அள்ளிய புஷ்பா
தெலுங்கு சினிமா ரசிகர்களால் ஐகான் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜூன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு அட்டகாசமான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வருகிற 17ம் தேதி வெளியாகவுள்ளது.
அல்லு அர்ஜூன் நடித்த படங்களிலேயே இப்படம்தான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளது.
அல்லு அர்ஜூனின் அல வைகுந்தபுரமுலோ வெற்றிக்கு பின் புஷ்பா படம் வெளியாவதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளடு. எனவே, இப்படத்தின் ரிலீஸுக்கு முன் வியாபாரம் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.