நாளை ‘புஷ்பா’ வெளியாவதில் சிக்கல்...ரசிகர்கள் அதிர்ச்சி....

by சிவா |   ( Updated:2021-12-16 06:21:50  )
pushpa
X

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு அட்டகாசமான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அல்லு அர்ஜூன் நடித்த படங்களிலேயே இப்படம்தான் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும். இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.

pushpa

அல்லு அர்ஜூனின் அல வைகுந்தபுரமுலோ வெற்றிக்கு பின் புஷ்பா படம் வெளியாவதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இதில், ஆச்சர்யம் என்னவெனில் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இங்கே வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ஆண்ட்ரியா பாடியுள்ள ‘ஓ சொல்றியா மாமா’ வைரல் ஹிட் ஆகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் புரமோஷனுக்காக அல்லு அர்ஜுன் சென்னை வந்து தமிழில் பேசி ரசிகர்களை கவர்ந்துவிட்டு சென்றார்.

pushpa

இந்நிலையில், இப்படம் நாளை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இதுவரை தெலுங்கு வெர்ஷன் மட்டுமே சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது. ஆனால், சில பணிகளினால் ஏற்பட்ட தாமதம் காரணமாக தமிழ் மற்றும் ஹிந்தி வெர்ஷன்கள் இன்னும் சென்சாருக்கு அனுப்பப்படவில்லை.

இன்று அனுப்பினாலும், நாளை மாலையே இப்படம் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. எனவே, நாளை காலை முதல் 2 காட்சிகள் புஷ்பா தமிழ் வெளியாகுமா என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது.

Next Story