புஷ்பா முதல் நாளிலேயே இத்தனை கோடி வசூலா?... கெத்து காட்டும் அல்லு அர்ஜூன்.....

by சிவா |
pushpa
X

தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படம் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.இப்படத்தை தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.

pushpa

இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு அட்டகாசமான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியானது. எனவே, இப்படத்தின் மூலம் அல்லு அர்ஜூன் பேன் இண்டியா ஹீரோவாக மாறியுள்ளார்.

இந்நிலையில், முதல் நாளிலேயே அனைத்து மொழிகளிலும் சேர்த்து இப்படம் ரூ. 47.50 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

pushpa

Next Story