Good Bad Ugly: தெலுங்கு இயக்குனர்களையும் ஆட்டம் காண வைத்த ‘குட் பேட் அக்லி’.. இத யாரும் எதிர்பார்க்கலயே

ajith
Good Bad Ugly: அஜித் நடித்து நேற்று வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் பட்டையை கிளப்பி வருகிறது. உலகெங்கிலும் 8000 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி மதியம் வரைக்கும் நெகட்டிவ்வான விமர்சனத்தையே பெற்று வந்தது. அஜித் ரசிகர்கள் மட்டுமே இந்த படத்தை கொண்டாடி வந்தனர் .அதன் பிறகு ட்விட்டரில் வரும் விமர்சனங்களை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர்.
மதியத்திற்கு பிறகு தான் இந்த படம் பெரிய அளவில் வெற்றி அடைந்ததாக தகவல் வெளியானது. இளைஞர்களிலிருந்து ஃபேமிலி ஆடியன்ஸ் வரை இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு பேட்டியில் கூறும்பொழுது லாஜிக் இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் அனைவரும் இந்த படத்தை மிகவும் ரசிப்பார்கள் என்று கூறியிருந்தார்.
அவர் சொன்னதைப் போல எந்த ஒரு லாஜிக்கையும் பார்க்காமல் இரண்டரை மணி நேரம் நிம்மதியாக ஒரு படத்தை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டால் இந்த படத்தை பார்க்கலாம். அந்த அளவுக்கு படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஒரே வைப்பாக தான் இருக்கிறது .புரமோஷன் செலவையும் சேர்த்து 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 114 கோடி வரை வியாபாரத்தில் வசூலை ஈட்டி இருக்கிறது.
நேற்று ஒரே நாளில் உலக அளவில் 40இல் இருந்து 50 கோடி வரை வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இதனுடைய வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது .குறிப்பாக தெலுங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புஷ்பா பட இயக்குனர் சுகுமார் அளித்த ஒரு பேட்டி இப்போது வைரலாகி வருகின்றது. அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார் சுகுமார். அதுவும் குட் பேட் அக்லி படம் ரிலீசுக்கு பிறகு இவருடைய இந்த பேட்டி வைரல் ஆவதால் குட் பேட் அக்லி படத்தையும் தெலுங்கு இயக்குனர்களையும் ஒப்பிட்டு பெரிய அளவில் அவர் கொடுத்த பேட்டி இன்னும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. கூடிய சீக்கிரம் புஷ்பா பட இயக்குனரும் அஜித்தும் இணைய வாய்ப்பும் இருக்கிறது