அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படம் எப்படி? - டிவிட்டர் விமர்சனம்

by சிவா |   ( Updated:2021-12-17 03:16:36  )
pushpa
X

தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் நடித்துள்ள திரைப்படம் புஷ்பா. இப்படம் ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை தெலுங்கில் பல ஹிட் படங்களை இயக்கிய சுகுமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்துள்ளார்.

pushpa

இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. மேலும், நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு அட்டகாசமான பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

அல்லு அர்ஜூனின் ‘அல வைகுந்தபுரமுலோ’ வெற்றிக்கு பின் புஷ்பா படம் வெளியாவதால் இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 மொழிகளில் இன்று வெளியானது.

pushpa

அல்லு அர்ஜூன் தெலுங்கு படம் முதன் முறையாக தமிழில் டப் ஆவதால் தமிழ் ரசிகர்களிடமும் இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதோடு, இப்படத்தில் இடம் பெற ஓ சொல்றியா மாமா, சாமி ஆகிய பாடல்கள் தமிழிலும் ஏற்கனவே ஹிட் அடித்திருந்தது.

twitt

இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் இன்று அதிகாலையிலேயே வெளியானது. தமிழிலும் சில தியேட்டர்களில் இப்படம் வெளியானது. சென்னையில் இன்று காலை முதல் காட்சி பல தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. மேலும், இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. படம் பார்த்த பலரும் இப்படம் சிறப்பாக இருப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

twit

அல்லு அர்ஜூன் நடித்த படங்களில் இப்படம் பெஸ்ட் எனவும், சுகுமாரின் இயக்கம் அசத்தலாக இருப்பதாகவும், கிளைமேக்ஸ் டிவிஸ்ட் சிறப்பாக இருப்பதாகவும், 2021ம் ஆண்டில் இப்படம் பிளாக்ஸ்பஸ்டர் படமாக இருக்கும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். அதோடு, அல்லு அர்ஜூனை யாராலும் அசைக்க முடியாது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

twit

எழுந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது புஷ்பா படம் தமிழகத்திலும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story