இந்த தெளிவு உங்கள எங்கேயோ கொண்டு போக போகுது...! புஷ்பா-2க்காக இயக்குனர் திடீர் முடிவு...
தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த திரைப்படம் தான் புஷ்பா தி ரைஸ் பார்ட் 1. ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட். சமந்தாவின் ஊ சொல்றியா பாடலில் அவரின் நடனத்திற்காகவே படம் இன்னும் ஹிட் அடித்தது என கூறலா. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் நடிப்பை சிறப்பாக பண்ணியிருப்பர். பகத்பாஸில் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவர் வரும் காட்சி அனைவரையும் திக்குமுக்காட வைத்தது. இதன் மூலம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இயக்குனர் சுகுமார் திடீரென பார்ட் -2 படப்பிடிப்பை நிறுத்தி விட்டார்.
என்ன என விசாரித்ததில் கே.ஜி.எஃப் படத்தின் ரிலீஸ் இவரை இன்னும் அதிகமாக யோசிக்க வைத்துள்ளது. புஷ்பா-1 வசூல் சாதனையை முறியடித்ததால் புஷ்பா-2 படத்தின் கதையை இன்னும் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளாராம். கே.ஜி.எஃப்-2 சாதனை ஓரளவுக்காவது எட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறாராம் இயக்குனர்.