Good Bad Ugly: என்ன மாதிரியான ஹிட் பாடல்.. இவருக்கே தெரியாம ‘குட் பேட் அக்லி’ படத்தில் யூஸ் பண்ண ஜிவி

by Rohini |   ( Updated:2025-04-13 06:45:33  )
ugly_ajith
X

ugly_ajith

Good Bad Ugly: குட் பேட் அக்லி படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனதற்கு முக்கிய காரணம் அதில் அமைந்த விண்டேஜ் பாடல்கள்தான். அதுவும் 90களில் வெளியாகி ஒரு கலக்கு கலக்கிய பாடல்களைத்தான் குட் பேட் அக்லி படத்தில் ஆதிக் பயன்படுத்தியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையில் அமைந்த பாடல்களும் அமோக வரவேற்பை பெற்றிருக்கின்றன. பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் அஜித் கெரியரில் இன்றுவரை டாப் லிஸ்ட்டில் இருக்கும் படங்கள்.

அந்தப் படங்களுக்கு பிறகு அதே மாஸ் உள்ள படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு அஜித்துக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து வேதாளம், விசுவாசம்,விவேகம் என செண்டிமெண்ட் ஆக்‌ஷன் படங்களிலேயே நடித்து வந்தார். அதனால் அஜித் ரசிகர்களும் மீண்டும் அவர் கேங்க்ஸ்டர் திரைப்படத்தில் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ரசிகர்களோடு ரசிகராக அதை ஆதிக் பூர்த்தி செய்தார்.

அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் எப்படி திருப்திபடுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்து பக்கா ஆக்‌ஷன் கேங்ஸ்டர் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். படம் வெளியாகி இன்றுடன் நான்கு நாள்கள் ஆன நிலையிலும் இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு சென்று வருகின்றனர்.

படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, ஒத்த ரூபா தர்றேன், விழியில் என் விழியில், இளமை இதோ இதோ போன்ற விண்டேஜ் பாடல்கள் அமைந்து படத்திற்கு இன்னும் கூடுதல் ஹைப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடல் எதிரும் புதிரும் படத்தில் அமைந்த சூப்பர் ஹிட் பாடல். சிம்ரன் மற்றும் ராஜு சுந்தரன் நடனத்தில் சூப்பர் ஹிட்டான பாடல்.

அந்த பாடலை பாடியவர் புஷ்பவனம் குப்புசாமி. குட் பேட் அக்லி படத்தில் தன் பாடல் இடம்பெற்றிருக்கிறது என குப்புசாமிக்கு தெரியாதாம். அவருடைய நண்பர்கள் அனுப்பிய வீடியோவை பார்த்துதான் அவர் தெரிந்து கொண்டாராம். அதுவும் அவருடைய நண்பர்கள் ‘உனக்கே தெரியாதா? உன் பாடலைத்தானே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

யாரும் போன் பண்ணவில்லையா’ என்று சொல்லி திட்டினார்களாம். ஜிவி உட்பட யாருமே இன்னும் புஷ்பவனம் குப்புசாமிக்கு போன் செய்து இதை பற்றி பேசவில்லையாம். ஆனால் அஜித் படத்தில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறேன். இதுவரை அவர் நேரில் சந்தித்ததில்லை. இந்தப் படம் மூலமாவது அவரை சந்தித்துஅவருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறதா என்பதை பார்ப்போம் என குப்புசாமி கூறினார்.

Next Story