நான் கருக்கலைப்புக்கு ஆதரவானவன்… பிரபல நடிகரின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்!

Published on: May 30, 2022
R J Balaji
---Advertisement---

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் ஆர்ஜே பாலாஜியும் ஒரு முக்கிய நபராக உள்ளார். சாதாரண ஆர்ஜேவாக அவர் திரைப்பயணத்தை தொடங்கி காமெடியன் ஹீரோ இயக்குனர் என தனக்கு தானே திறமைகளை வளர்த்துக் கொண்டு தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆர்ஜே பாலாஜி தற்போது ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தை தமிழில் வீட்ல விசேஷம் என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார். படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

veetla visheshanga

படத்தில் ஆர்ஜே பாலாஜி தவிர ஊர்வசி சத்யராஜ் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ஆர்ஜே பாலாஜி கூறியிருப்பதாவது, “பதாய் ஹோ ஒரு நல்ல படம். ஆனால் படத்தை முழுவதுமாக மொழிமாற்றம் செய்ய முடியாது.

நம் மாநிலத்தின் உணர்வுகள் வேறு. வடக்கில் உள்ள உணர்வுகள் வேறு. இரண்டாவது விஷயம், படத்தில் சில விஷயங்கள் உள்ளன. தனிப்பட்ட முறையில், ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக எனக்கு அதில் ஒப்புதல் இல்லை.

r j balaji

உதாரணமாக பதாய் ஹோ படத்தில் கருக்கலைப்பு தவறு என கூறுகிறார்கள். ஆனால் நான் தனிப்பட்ட முறையில் கருக்கலைப்புக்கு சார்பானவன். கருக்கலைப்பு ஒரு பாவம் என்று நான் நம்பவில்லை என்பதால் நான் அதை ரீமேக்கில் மாற்ற வேண்டியிருந்தது” என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.