யாரடா இவர் 10 நாள் 18 நாட்கள்ல பெரிய பெரிய படங்களை முடிக்கிறார்.!?
இயக்குனர் ஆர் கண்ணன் அவர்கள் 2008 ஆம் ஆண்டு ஜெயம்கொண்டான் எனும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் எனும் திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து இருந்தார்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தை தெலுங்கிலும் அவர் உருவாக்கியிருந்தார். இந்த படத்திற்க்கான ஷூட்டிங்கை இயக்குனர் கண்ணன் அவர்கள் 12 நாட்களிலே முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல 1972 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காசேதான் கடவுளடா படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர் கண்ணன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பையும் கண்ணன் 18 நாட்களில் முடித்து விட்டாராம்.
இந்த படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார். 12 நாட்கள், 18 நாட்கள் என ஐஸ்வர்யா ராஜேஷ், மிர்ச்சி சிவா என பிஸியான நடிகர்களை வைத்தே முடித்துள்ள கண்ணனை பார்த்து திரையுலகமே வியந்து நிற்கிறது.