அதிர்ச்சியில் உறைந்து போன சூர்யா.! ரெண்டு போரையும் ஒரே இடத்தில் பாத்துட்டார்.. வைரல் வீடியோ இதோ..

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் மாதவன். அதன் பின்னர் மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என பல்வேறு திரைப்படங்களில் நடித்து நல்ல நடிகராக வலம் வந்துள்ளார்.
அதன் பின்னர் தமிழை தாண்டி ஹிந்தி பக்கமும் தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார். இவர் தற்போது தனது இயக்கத்தில் முதன் முறையாக ஒரு படத்தை முடித்துள்ளார்.
ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்வை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாதவனே ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் இந்த வாரம் ரிலீசாக உள்ளது இப்படத்தில் தமிழ் வெர்சனில் நடிகர் சூர்யா கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்களேன் - மேல கைவச்சிட்டான்.. சிசிடிவி பாருங்க தெரியும்.. சீரியல் நடிகையின் பதிலடியை பாருங்க...
அப்போது எடுக்கப்பட்ட ஒரு விடியோவை நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சூர்யா இருக்கிறார். அப்போது நம்பி நாராயணன் கெட்டப்பில் மாதவன் இருக்கிறார். ஒரிஜினல் நம்பி நாராயணனும் அங்கு இருக்கிறார். இருவரும் ஒரே மாதிரி இருப்பதால் சற்று ஜெர்க் ஆகிவிட்டார் நடிகர் சூர்யா.
பிறகு நம்பி நாரயணன் உங்கள் படங்கள் எல்லாம் பார்த்து இருக்கிறேன். கஜினி படத்தை குறிபிட்டு வாழ்த்து கூறினார். பிறகு நிதானித்து சூர்யா பேச தொடங்கினார். அருகில் நம்பி நாரயணன் கெட்டப்பில் மாதவன் இருந்தார்.