Categories: Cinema History

பாக்யராஜை கல்லெடுத்து அடிக்கப்போனேன்!.. ஆர்.சுந்தர்ராஜன் சொன்ன பிளாஷ்பேக்!…

ஆர்.சுந்தர்ராஜன், கே.பாக்யராஜ் எல்லோருமே கோவையை சேர்ந்தவர்கள்.. சினிமா ஆசையில் ஒன்றாகவே சென்னைக்கு வந்தவர்கள். இருவருமே சினிமாவில் பெரிய இயக்குனர்களாக முத்திரை பதித்தவர்கள்.. இருவருமே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். இந்நிலையில்தான் சமீபத்தில் ஆர்.சுந்தர்ராஜன் கொடுத்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நானும் பாக்யராஜும் ஒன்னாவே சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடினோம்… ஒன்றாகத்தான் தங்கியிருந்தோம்.. அப்போது பாரதிராஜா வந்து கொண்டிருந்தார்.. அவருக்கு உதவி இயக்குனர் தேவைப்படுகிறது என தெரிந்து நான்தான் பாக்யராஜை அவரிடம் அனுப்பி வச்சேன்.. பாக்யராஜுக்கு அப்ப கொஞ்சம் இங்கிலீஷ் தெரியும்.. அதனால அந்த வேலைக்கு அவன் சரியா இருப்பான் என்று நினைத்தேன்..

நைட் ஃபுல்லா என் கிட்ட போகலைன்னு சொல்லிட்டு இருந்தவன் அடுத்த நாள் காலையில எந்திரிச்சி அவர்கிட்ட போய் சேர்ந்துட்டான். அதுல எனக்கு வருத்தம்.. திடீர்னு ஒரு நாள் அவன்கிட்ட இருந்து எனக்கு ஒரு லெட்டர் வந்தது.. ‘நீ ஊருக்கு கிளம்பி போ.. நான் படம் பண்ணும் போது உன்னை கூப்பிடுறேன்’ என எழுதியிருந்தான்.. அந்த லெட்டரின் நடு பக்கத்துல ‘நன்றி’ என எழுதி அவனுக்கே திருப்பி அனுப்பிட்டேன்..

ஒரு நாள் நானும், அவனும் பட்டினியா பல நாட்கள் நடந்த மவுண்ட் ரோட்ல நான் தனியா நடந்து போயிட்டு இருக்கும்போது பாக்யராஜ் பென்ஸ் காரில் வந்தான். ‘என்னை தேனாம்பேட்டையில் இறக்கி விடு’ன்னு கேட்டேன்.. ஆனா முடியாதுன்னு சொன்னார். எனக்கு கோபம் வந்து பக்கத்துல இருந்த கல்லெடுத்து அடிக்கப்போனேன். பென்ஸ் கார்ல போறது போனது அவனோட வளர்ச்சிதான்.. ஆனால் யாருக்கும் துரோகம் பண்ண கூடாது.. யாரையும் ஏமாத்தக் கூடாது.. அதுதான் எனக்கு பெரிய வருத்தம்’ என்று சொல்லியிருக்கிறார்..

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

57 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago