ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் நான் பாடும் பாடல் படம் வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல தயாரிப்பாளர்கள் ஓடி வந்தார்கள். அவர்களிடம் எல்லாம் ஆர்.சுந்தரராஜன் சொன்ன பதில் இதுதான். எனக்கு இப்போது சொந்த வீடு வேண்டும். யார் வாங்கித் தருகிறீர்களோ அவர்களுக்குத் தான் என் அடுத்த படம் என்றாராம்.
உடனே ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. அட்வான்ஸாக 2 லட்சமும் வந்தது. அப்போது கொஞ்சம் தயங்கினாராம். அடுத்த படத்திற்கான கதையை இன்னும் தயார் செய்யவில்லையே என்று. அதைப்பற்றி பரவாயில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம். இந்தப் பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என்றார்களாம். உடனே அதை வாங்கி புது வீடு வாங்க அட்வான்ஸ் கொடுத்தாராம்.
அடுத்த சில நாள்களில் கதை தயாரானது. அது தான் கேப்டன் விஜயகாந்த் நடித்த வைதேகி காத்திருந்தாள். கதையை சொன்னார் சுந்தரராஜன். நல்லா இருக்கு. ஹீரோ யார்னு கேட்க, விஜயகாந்த் தான் பொருத்தமானவர். அவர் நடித்தால் தான் வெற்றி பெறும் என்று ஆணித்தரமாக சொன்னாராம் சுந்தரராஜன். விஜயகாந்தா வேண்டாம். ஏற்கனவே வெற்றி பெற்ற நான் பாடும் பாடல் படத்தில் சிவகுமார் தானே ஹீரோ. வைதேகி காத்திருந்தாள் படத்திலும் அவரையே நடிக்க வையுங்கள் என்றாராம்.
தொடர்ந்து அந்த வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த் தான் உறுதியாக இருப்பார் என்றாராம் சுந்தரராஜன். பொறுமையாகக் கேட்ட ஏவிஎம், அப்படி என்றால் நாங்க கொடுத்த தொகையை திருப்பி கொடுங்க என்றாராம். சுந்தரராஜன் ஒரு கணம் திகைத்து விட்டார். ஏன்னா அந்தப் பணத்தைத் தான் வீடு வாங்க அட்வான்ஸாகக் கொடுத்து இருந்தார். இப்போது அவர் கைவசம் பணம் இல்லை. என்ன செய்ய என தெரியாமல் தடுமாறினார்.
ஏவிஎம் கொடுத்த 2 லட்சத்தை எப்படி திருப்பிக் கொடுப்பது? என்று சிந்தித்தபடி அன்று மாலை வாக்கிங் சென்றாராம். அப்போது எதிரே கதாசிரியர் தூயவன் வந்தாராம். என்ன நடந்தது என அக்கறையோடு கேட்ட தூயவனிடம் எல்லாவற்றையும் சொன்னார் சுந்தரராஜன். இவ்வளவு தானே… இதற்குப் போய் கவலைப்படலாமா… வாங்க என்னோடு… என அழைத்துச் சென்றார்.
அடுத்த சில நிமிடங்களில் பஞ்சு அருணாச்சலத்தின் வீட்டில் இருந்தார்கள். வைதேகி காத்திருந்தாள் கதையை மறுபடியும் சொல்ல, அவர் கைகளில் 2 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. அதை ஏவிஎம்மிடம் திருப்பிக் கொடுத்தார். தூயவன் வைதேகி காத்திருந்தாள் படத்தின் தயாரிப்பாளர் ஆனார்.
இதையும் படிங்க… அந்த ஓவர் கோட்டும் எதுக்கு?.. உள்ளாடை தெரிய உச்சகட்டத்தை காட்டிய சமந்தா.. பதறிய ஃபேன்ஸ்!..
நமக்கு எப்போது எது தேவையோ அதைத் தர எப்படியாவது ஒரு வழியைக் கொண்டு வந்து சேர்ப்பது இந்த பிரபஞ்சம் தான். அது ஆர்.சுந்தரராஜனுக்கு மட்டும் நடப்பதில்லை. அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருந்தால் உங்களுக்கும் இது சாத்தியமே.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…