More
Categories: Cinema News latest news

விஜயகாந்த் சின்னக்கவுண்டர் கிடையாதாம்…. ரஜினிகாந்த் தான் சின்னக்கவுண்டராம்…..

கோலிவுட் சினிமாவில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரே ஒரு நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அன்றும் இன்றும் என்றும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதற்கேற்ப தற்போதும் ரஜினியின் மார்க்கெட் உச்சத்தில் தான் உள்ளது. சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்தின் வசூலே அவர் மார்க்கெட் எந்த இடத்தில் உள்ளது என்னும் நிலவரத்தை கூறிவிடும்.

இப்போதே பிசியாக இருக்கும் ரஜினி அந்த காலத்தில் எவ்வளவு பிசியாக இருந்திருப்பார். அதனால் தானோ என்னவோ ரஜினி அவரை தேடி வந்த பல நல்ல படங்களின் வாய்ப்புகளை தவறவிட்டுள்ளார். அதில் மிகவும் முக்கியமான படம் குறித்து தான் தற்போது பார்க்க போகிறோம்.

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் நட்ட நிச்சயம் விஜயகாந்த் இருப்பார். அவர் சண்டை காட்சிகளில் நாக்கை கடித்து தூக்கி அடிக்கும் காட்சிக்கு தனி ரசிகர்களே உள்ளனர். அந்த அளவிற்கு விஜயகாந்த் ஒரு சமயத்தில் பிரபல நடிகராக வலம் வந்தார். ரஜினி கமலுக்கே டஃப் கொடுப்பார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

vijayakanth

இவர் திரைவரலாற்றில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது சின்னக்கவுண்டர் படம் தான். இப்படத்திற்கு பின்னர் விஜயகாந்தின் மார்க்கெட் சற்று உயர தொடங்கியது. ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் தான் சின்னக்கவுண்டர்.

இளையராஜா இசையில், விஜயகாந்த் தவிர சுகன்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் கிராமத்து கதையம்சத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜயகாந்த் கிடையாது என்றால் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி சின்னக்கவுண்டர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் முதலில் நடிக்க இருந்தாராம். இதற்காக படக்குழுவினர் அவரை அணுகிய சமயத்தில் அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லையாம். அதன் பின்னர் தான் விஜயகாந்த் இப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வெற்றி பெற்றதாம்.

Published by
ராம் சுதன்

Recent Posts