Connect with us

ஆள விடுங்க சாமி- பாரதிராஜா படத்தில் இருந்து நடு ராத்திரியில் தப்பி ஓட நினைத்த ராதிகா…

Raadhika

Cinema News

ஆள விடுங்க சாமி- பாரதிராஜா படத்தில் இருந்து நடு ராத்திரியில் தப்பி ஓட நினைத்த ராதிகா…

யதார்த்த நடிப்புக்கு பெயர் போன ராதிகா, ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர். இவர் பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழின் டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்தார் ராதிகா.

தற்போது தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வருகிறார் ராதிகா. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடன இயக்குனர் புலியூர் சரோஜா, ராதிகாவின் முதல் திரைப்படமான “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.

Kizhakke Pogum Rail

Kizhakke Pogum Rail

அதாவது “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது தனது அறையில் இருந்து தனது பெட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பினாராம் ராதிகா. இதனை தற்செயலாக பார்த்த புலியூர் சரோஜா, “என்ன ஆச்சு, எங்க போற?” என கேட்டிருக்கிறார்.

அதற்கு ராதிகா, “அக்கா, என்னைய விட்ருங்கக்கா, எனக்கு சினிமாவே வேண்டாம். என்னால டான்ஸ் ஆடவே முடியல, ரொம்ப கால் வலிக்குது. நான் ஊருக்கே போறேன்” என கூறினாராம். அப்போது புலியூர் சரோஜாதான் ராதிகாவை சமாதானப்படுத்தி அவரை தங்கவைத்தாராம்.

Puliyur Saroja

Puliyur Saroja

அதன்பின் “மாஞ்சோலை கிளிதானோ” என்ற பாடலுக்கு மிகவும் பொறுமையாக பரதநாட்டியம் ஆடச் சொல்லிக்கொடுத்தாராம் புலியூர் சரோஜா. மேலும் அவருக்கு கால் வலிக்காமல் இருப்பதற்கு காலில் தேய்க்க ஒரு மருந்தை வாங்கிக்கொடுத்தாராம் புலியூர் சரோஜா.

Raadhika

Raadhika

பாடல் படப்பிடிப்பின்போதெல்லாம் நடனமாடிய பிறகு இரவில் ராதிகாவின் அம்மா அவரது காலில் அந்த மருந்தை தேய்ந்த்துவிடுவாராம். இவ்வாறு ராதிகாவை அரவணைத்து அந்த பாடலில் நடனமாட வைத்திருக்கிறார் புலியூர் சரோஜா.

இதையும் படிங்க: சிவாஜி நடித்த படத்திற்கு சில்க் ஸ்மிதாவை வைத்து புரொமோஷன் செய்த தயாரிப்பாளர்… அப்படி என்ன பண்ணார் தெரியுமா?

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top