தங்க நிற உடையில் கலக்கலாக போஸ் கொடுத்திருப்பது யாருன்னு பாருங்க!.. இன்ஸ்டாகிராம் தேவதையே வாழ்க!..

#image_title
நடிகை ராய் லட்சுமிக்கு கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்திருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். ராய் லட்சுமி தொடர்ந்து தான் க்ளாமரான உடை அணிந்திருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றும் தங்க நிற பிகினியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த ராய் லட்சுமி மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கினார். அதை தொடர்ந்து 2005ம் ஆண்டு தமிழில் வெளியான கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, வால்மீகி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் பிரபலாமாக பேசப்படவில்லை. அதையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் படத்தில் நடித்து கலவையான விமர்சனங்களை பெற்றார்.

ராய் லட்சுமி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக சிண்ட்ரெல்லா என்ற திகில் படத்தில் நடித்திருந்தார். அதுவும் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகளை இழந்த ராய் லட்சுமி சமூக வலைதளத்தில் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டு வருகிறார். லெஜண்ட் சரவணன் உடன் ஒரு குத்தாட்டம் போட்ட அவர், கிக்கேற்றும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று ராய் லட்சுமி தங்க நிற பிகினியில் படு கவர்ச்சியாக போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சம்மர் சூட்டை மேலும், அதிகரித்து வருகிறார். அவரது லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கில் லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.