ஜிம் டிரெய்னருடன் செம வொர்க்கவுட் செய்யும் ராஷி கன்னா!.. போஸெல்லாம் சும்மா பலமா இருக்கே!..

by Saranya M |   ( Updated:2025-04-02 06:31:39  )
ஜிம் டிரெய்னருடன் செம வொர்க்கவுட் செய்யும் ராஷி கன்னா!.. போஸெல்லாம் சும்மா பலமா இருக்கே!..
X

#image_title

நடிகை ராஷி கன்னா தமிழில் கடைசியாக நடித்து வெளியான அகத்தியா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது ராஷி கன்னா ஜிம்மில் கடினமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஷி கன்னா 2013ம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கபே படத்தின் மூலம் தன் திரைவாழ்க்கையை தொடங்கினார். அதை தொடர்ந்து மனம் என்ற தெலுங்கு படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த அவர் உவளு குசகுசாலாடே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும் ஜோரு, ஜில், சிவம், சுப்ரீம், ஹைப்பர், ராஜா தி கிரேட் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ராஷி கன்னாவின் முதல் தமிழ் திரைப்படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா கதநாயகியாக நடித்திருந்த அந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 4, சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார்.மேலும், ஓடிடியில் வெளியான ருத்ரா மற்றும் ஃபர்சி போன்ற வெப்சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

ராஷி கன்னா தற்போது அவர் ஜிம்மில் கடினமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இருக்கீங்க என்றும் வெண்ணெய் சிலை என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஜீவாவுடன் சேர்ந்து நடித்த அகத்தியா திரைப்படம் செல்ஃப் எடுக்காத நிலையில், சர்தார் 2 படம் இவருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் கன்னடத்தில் இவர் நடித்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

Next Story