Entertainment News
அஞ்சரை அடி ஐஸ்கீரிம் சிலை நீ!…ராஷி கண்ணாவிடம் உருகும் நெட்டிசன்கள்…
டோலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷி கண்ணா. இவர் ஒரு பாடகியும் கூட. தமிழ், மலையாள திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்த பின்னரே அவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இமைக்கா நொடிகள் படம் மூலம் இவர் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளர் தர்பார்,அரண்மணை 3 என பல படங்களில் நடித்துவிட்டார்.
தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள சர்தார் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
ஒருபக்கம், தன்னுடையை அழகான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.