என் பொண்டாட்டியை கைய பிடிச்சு இழுத்தியா? ராபர்ட்டிற்கு ரெட் கார்ட் கொடுங்க கொதித்தெழுந்த ரக்சிதா கணவர்...

by Akhilan |
ரக்சிதா
X

ரக்சிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு இருக்கும் ரக்சிதா கணவரும், நடிகருமான தினேஷ், ராபர்ட் மாஸ்டர் மீது கடுப்பில் இருக்கிறாராம். விரைவில் அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றும் பணிகளை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது.

ரக்சிதா

ரக்சிதா

தமிழில் ஆறாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே கலவரங்கள் வெடித்தது. தொடர்ச்சியாக உள்ளே இருப்பவர்களும் கண்டெண்ட் கொடுக்கிறேன் என சில கோளாறுகளை செய்து ரசிகர்களிடம் வசை வாங்கி கொள்கின்றனர். இதில் அசல் கோளாறின் சேட்டையில் கடுப்பான இணையவாசிகள் அவரை வெளியேற்றி விட்டு நிம்மதி பெருமூச்சு விட மீண்டும் ஒரு காதல் பிரச்சனை உருவெடுத்து இருக்கிறது.

சின்னத்திரை நடிகை ரக்சிதா மீது ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு கண் என அவர் வந்த முதல் நாளில் இருந்தே அனைவருக்கும் தெரிந்துவிட்டது. தொடர்ச்சியாக அவர் பின்னாடியே ராபர்ட் சுற்றி வந்தார். கடந்த வாரம் நீங்கள் என் நண்பர் மட்டுமே என்பதை ரச்சிதா பொறுமையாக் புரிய வைத்தும் அவர் மாறாதது ரச்சிதாவிற்கு பெரிய கஷ்டத்தினை கொடுத்திருக்கிறது. இந்த வார எபிசோட் ஒன்றில் ரச்சிதாவின் கையை பிடித்துக்கொண்டு முத்தம் கொடு என ராபர்ட் கேட்டது பல ட்விட்டர்வாசிகளிடம் கண்டத்தை கொடுத்தது.

ரக்சிதா

ரக்சிதா

இதுப்போன்று, நடிகை ரக்சிதாவின் கணவரும் நடிகருமான தினேஷும் தன் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு மேலும் ரக்சிதாவின் ஆட்டத்தை டிஸ்டர்ப் செய்ய நினைத்தால், ராபர்ட்டை ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என தொலைக்காட்சி நிர்வாகத்திடம் முறையீட இருப்பதாகவும் நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வட்டமடித்து வருகிறது.

Next Story