பிட்டு பட நடிகை இமேஜ்.. ஃபயர் படத்தின் 50வது நாள் விழாவையும் தவிர்த்த ரச்சிதா மகாலட்சுமி!

#image_title
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியான ஃபயர் திரைப்படம் 7 வாரங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று ஃபயர் படத்தின் 50வது நாள் வெற்றி விழாவை கொண்டாடியுள்ள விடியோ இன்ஸ்டாகிராமில் படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும், அந்த விழாவில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கலந்துகொள்ளாதது ரசிகர்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தயாரிப்பாளர் சதிஷ் குமார் தயாரித்து இயக்கிய ஃபயர் திரைப்படத்தில் பாலாஜி முருகதாஸ் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்திரி ஷான் உள்ளிட்ட நான்கு நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி.கே இசையமைத்துள்ளார். பிட்டு படம் போல இருக்கு என கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் இந்த படம் கலெக்ஷனை அள்ளிய வெற்றி படம் என ஃபயர் படக்குழு 50 நாட்களை கடந்துள்ளது என விழாவையும் கொண்டாடியுள்ளனர்.

இந்திய ஃபேஷன் மாடலாக தன் கரியரை தொடங்கிய பாலாஜி முருகதாஸ் நடிப்பில் உள்ள ஆர்வத்தினால் தன்னை பிரபலமாக்கிகொள்ள பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரை தாக்குப்பிடித்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
மேலும், ஃபயர் படத்தில் பாலாஜி முருகதாஸுடன் ரச்சிதா மகாலட்சுமி மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமான ரச்சிதா இன்னமும் பலரின் மனதில் மீனாட்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் அளவிற்கு அந்த கதாப்பாத்திரத்தில் அவர் கச்சிதமாக பொருந்தியிருந்தார். ஃபயர் படத்தில் அவரின் நடிப்பை பார்த்த பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டார். ரச்சிதா அப்படி நடித்திருக்க வேண்டாம் என பலருடைய கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஃபயர் படத்தின் 50வது நாள் வெற்றி விழாவில் ரச்சிதாவை தவிற அனைவரும் கலந்துக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ரச்சிதாவுக்கு கிடைத்த பல மோசமான விமர்சனங்களால் அவர் தொடர்ந்து ஃபயர் படத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வது இல்லை. மேலும், ரச்சிதாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதால், அவரின் அடுத்த படத்தில் பிசியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.