Vijay tv: பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் வீட்டில் பெரிய கப்போர்ட் முழுவதும் விலையுயர்ந்த மது பாட்டில்கள் இருக்கும் வீடியோ பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் ஹீரோயின்களுக்கு ஒன்று அல்லது இரண்டு சீரியல்கள் கிடைப்பதே ஆச்சரியம். ஆனால் ஒரு நடிகைக்கு ஐந்து சீரியல்கள் வரை நடித்தது என்னவோ ரச்சிதா மகாலட்சுமி தான். நடிப்பிலும் சரி அவருடைய கதை தேர்வுகளும் சரி வித்தியாசமானதாகவே அமையும்.
ரச்சிதா எப்போதுமே மாடர்ன் உடை இல்லாமல் குடும்ப பாங்கான உடைகளில் தான் வெளியில் தோன்றுவார். அவர் கணவர் தினேஷுடன் முதலில் வெளியுலகிற்கு காணப்பட்டவர் பிக்பாஸ் தமிழில் அதிர்ச்சி கொடுத்தார். உள்ளே இருக்கும் போது கணவர் குறித்து வாய் திறக்கவே இல்லை. ஒருகட்டத்தில் பிரபல நடன இயக்குனர் ராபர்ட்டுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். அப்போது தான் இவர் கணவரை பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வந்தது.
அதை தொடர்ந்து பிக்பாஸில் ரச்சிதா ஐந்தாவது இடம் மட்டுமே பெற முடிந்தது. வெளியேறியவர் சின்னத்திரைக்குள் வராமல் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார். அதை தொடர்ந்து அவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தார்.
இந்நிலையில் ஃபேமிலி கேர்ள் லுக்கில் காணப்பட்டு வந்த ரச்சிதா சமீபத்திய இண்டர்வியூ அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் வீட்டு டூர் அது. அதில் ஒரு கப்போர்ட்டினை காட்டி இது டானிக். எல்லாருக்கும் இது தேவை என வசனம் பேச என்ன காட்ட போகிறாரோ என ஆவல் எழுகிறது.
திறந்த நொடி பார்த்தால் விதவிதமான சரக்கு வகைகள் தான் அது. இதை தினமும் குடிக்க கூடாது. வாரம் அளவாக எடுத்துக்கொள்ளலாம் என அம்மணி பேசுகிறார். அவர் அப்பா மது பிரியராம். அதற்காக இந்த சரக்கு பாரை வீட்டில் செட் செய்து இருப்பதாக ரச்சிதா சொன்னாலும் அவர் முன்னவே இறந்துவிட்டார்.
தற்போது அண்ணன் குடிப்பதாக ரச்சிதா சொன்னாலும் அவர் தான் பெரிய பெரிய இடத்தில் இருந்து விதவிதமான சரக்கை இறக்கி வருவதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். என்னம்மா நீங்களே இப்படி செய்யலாமா எனவும் தொடர் கமெண்ட்களால் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…