
Cinema News
ஃபயர் படத்தால் அடித்த யோகம்!.. ரச்சிதா மகாலட்சுமி அடுத்த படத்துக்கு இவ்ளோ சம்பளம் வாங்குறாரா?..
சமிபத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்து வெளியான ஃபயர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை அள்ளித்தந்தது. அதை தொடர்ந்து ரச்சிதாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி அவரது அடுத்த படத்திர்கான பூஜையில் கலந்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ரச்சிதா கன்னடாவில் மேகா மண்டலா என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் பிரிவோம் சந்திப்போம், இளவரசி, மசால குடும்பம் என பல தொடர்களில் நடித்துள்ளார். ஆனால் விஜய் டிவியில் ஒளிப்பரபான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் தான் இவர் பிரபலமானார். மேலும் இவர் இன்றும் மீனாட்சியாக பல ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார்.

#image_title
பிரிவோம் சந்திப்போம் தொடரில் ரச்சிதா தன் உடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சில ஆண்டுகளில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதை தொடர்ந்து அவர் தனது நம்பிக்கையை கைவிடாமல் பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி அவருக்கு பட வாய்ப்புகள் வருவதற்கு உதவி செய்தது.
ரச்சிதா உப்பு கருவாடு, எக்ஸ்ட்ரீம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த ஆண்டு வெளியான ஃபயர் திரைபடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. ஃபயர் படத்தில் பாலாஜி முருகதாஸ் நெகடிவ் ரோலில் நடித்திருந்தாலும் அவருக்கும் பட வாய்ப்புகள் வருவதாகவும், அவரது சம்பளமும் 15 லட்சத்தில் இருந்து 45 லட்சமாக உயர்ந்துள்ளது என அவரே கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரச்சிதா ஸ்ரீ காவியா மூவீஸ் தயாரிக்க உள்ள படத்தின் பூஜையில் கலந்துக்கொண்டுள்ளார். அவர் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த படத்திற்கு ரச்சிதாவின் சம்பளம் 50லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.