சாப்பாட்டிலும் சமத்துவம் பார்த்த எம்.ஆர்.ராதா!..அம்மாவின் செய்கையால் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம்!..
தமிழ் திரையுலகின் பிரம்மாக்களாக கருதப்படுபவர்களில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் ஒருத்தர். நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராக பெரும் புகழைப் பெற்றவர். தன்னுடைய எதார்த்தமான நகைச்சுவையால் சமூக கருத்துக்களை முன் நிறுத்துபவர்.
தனது முற்போக்குக் கொள்கைகளால் அனைவரையும் ஈர்த்தவர். சாதி, சமயம், தீண்டாமை இவைகளை அறவே வெறுப்பவர் எம்.ஆர்.ராதா. இதை தன் படங்களின் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். என்னங்கடா சாமி? அந்த சாமியா வந்து சோறு போட போகுது? என நகைச்சுவை மூலம் அதிலுள்ள உண்மையை உறக்க சொன்னவர் எம்.ஆர்.ராதா.
இதையும் படிங்க : விஜய் தவறவிட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள்… ஜஸ்ட் மிஸ்…
இப்படி பட்ட ஒரு மாபெரும் கலைஞனை சினிமாவிற்குள் புகுத்தியதில் அவரின் அம்மாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது.அதுவும் அவரது அம்மா அவரது வீட்டில் காட்டிய சமத்துவமின்மையால் வீட்டை விட்டு வெளியேறியவர் தான் அதன் பின் வீட்டு பக்கமே போகவில்லையாம். எம்.ஆர்.ராதாவுக்கும் அவரது அண்ணனுக்கும் மீனுடன் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாராம் அவரது அம்மா. அப்பொழுது கூடுதலாக ஒரு துண்டை மீனை அவரது அண்ணனுக்கு வைத்து விட்டாராம் அம்மா.
இதையும் படிங்க : அறிவே இல்லயா?!..கோமாளிங்களா!..நயன்-விக்கி விஷயத்தில் காண்டான வனிதா விஜயகுமார்..
ஏன் அவனுக்கு மட்டும் ஒரு துண்டு கூடுதலாக என கேட்டிருக்கிறார் எம்.ஆர்.ராதா. அவரது அண்ணன் ஏதோ வேலைக்கு போய் சம்பாதித்துக் கொண்டிருந்ததனால் என்னவோ சொல்லியிருக்கிறார். இதனால் கோபமுற்ற எம்.ஆர்.ராதா தன் வீட்டிலும் சமத்துவத்தை எதிர்பார்க்க அது நடக்கவில்லை என தெரிந்து வீட்டை விட்டு வெளியேறியவர் தான் திரும்ப போகாமல் சினிமா பக்கம் வந்திருக்கிறார். அன்று மட்டும் அந்த மீன் துண்டு எம்.ஆர்.ராதாவுக்கு கிடைத்திருந்தால் இப்படி பட்ட மாமேதையை நாம் பார்த்திருக்க முடியாது.