“தம்பி இப்படி நடிக்காத”… சூர்யாவின் வெற்றிக்கு வழி வகுத்த ராதாரவி…

by Arun Prasad |
“தம்பி இப்படி நடிக்காத”… சூர்யாவின் வெற்றிக்கு வழி வகுத்த ராதாரவி…
X

நடிகர் சூர்யா தற்போது தமிழின் டாப் ஹீரோவாக திகழ்ந்து வந்தாலும் நடிக்க வந்த புதிதில் அவர் சந்திக்காத அவமானங்களே கிடையாது. சூர்யா அறிமுகமான முதல் திரைப்படம் “நேருக்கு நேர்”.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கு சரியாக நடிப்பே வரவில்லை. சாப்பாட்டு இடைவேளையில் சாப்பிடும்போது சூர்யா “சாப்பாடு நன்றாக உள்ளது” என கூறியிருக்கிறார். அதற்கு வசந்த் “நல்லா சாப்பிடு ராஜா” என கேலியாக கூறியிருக்கிறார். இதை நினைத்து நினைத்து சூர்யா பல முறை அழுதிருக்கிறார். இச்சம்பவத்தை ஒரு முறை சூர்யாவே பகிர்ந்திருந்தார்.

மேலும் அவர் சினிமாவில் சிறந்த நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவரது உயரத்தை பலரும் கேலி செய்தனர். இவ்வாறு பல விமர்சனங்களையும் கேலிகளையும் கடந்து வந்தவர் தான் சூர்யா.

தற்போது சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த சமூக சேவகராகவும் சூர்யா வளர்ந்துள்ளார். பல ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழிவகுத்து வருகிறார். அவரது அயராத உழைப்பு தான் இந்த அளவுக்கான வளர்ச்சியை அவருக்கு தந்திருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ராதாரவி, “ஃப்ரண்ட்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சூர்யா உடனான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதாவது படப்பிடிப்பில் விஜய் சிறப்பாக நடித்துக்கொண்டிருக்கும்போது சூர்யா மிகவும் தயக்கத்தோடயே நடித்திருக்கிறார்.

இதனை பார்த்த ராதா ரவி சூர்யாவை அழைத்து “தம்பி, நீ தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான கதாநாயகன். ஏன் பம்மி பம்மி நடிக்கிறாய், நன்றாக நடி” என்று கூறியுள்ளார். இது சூர்யாவின் வளர்ச்சிக்கு ஒரு வித்தாக அமைந்திருக்கிறது.

அதே போல் ஒரு முறை ஒரு பேட்டியில் நடிகர் விஜய் “நான் நன்றாக நடிப்பதற்கு ராதா ரவியும் ஒரு காரணம்” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story