1979 இல் சினிமாவிற்குள் அறிமுகமாகி இதுவரை 100க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர். பலருக்கும் பல விதமான உதவிகள் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு கொடுக்கும் உணவைதான் பணியாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்கிற விதிமுறையை கொண்டு வந்து அதை செயல்படுத்திய முதல் கதாநாயகர் நடிகர் விஜயகாந்த். அவரது நல்ல குணத்தின் காரணமாக பலர் அவருக்கு நண்பர்களாக இருந்தனர்.
நடிகர் ராதாரவி விஜயகாந்துடன் வெகு காலமாக சினிமாவில் பயணிப்பவர். இருவருக்குமிடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது.
மருத்துவ சிகிச்சைக்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாத வண்ணம் மாறி இருந்தார். பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தும் ஒரு புகைப்படமாக அது இருந்தது.
அதுக்குறித்து ராதாரவி கூறும்போது “எனக்கே அவனை அடையாளம் தெரியல. ஊரில் எல்லோருக்கும் நல்லது செய்த ஒரு மனிதனுக்கு இப்படி ஆகி இருக்க கூடாது. அந்த போட்டோவை பார்த்ததில் இருந்து அவனை சந்திக்கலாம் என நினைக்கிறேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை” என அழுதுக்கொண்டே ஒரு பேட்டியில் கூறுகிறார் ராதாரவி.
தமிழ் திரையுலகில்…
தமிழக வெற்றிக்…
தற்போது புதிதாக…
தற்போது சிவகார்த்திகேயன்…
நடிகை ஜீவாவின்…