இது செம காமெடி!..நீங்க செய்யக்கூடாது!.. ரஜினியை முகத்துக்கு நேராக கலாய்த்த ராதாரவி...
சினிமாவிலும், அரசியலிலும் மனதில் தோன்றியதை அப்படியே பலரும் பேசமாட்டார்கள். ஏனெனில், அப்படி பேசுவது பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஆனாலும் அதையெல்லாம் கவலைப்படமால் சிலர் எப்போதும் மிகவும் வெளிப்படையாகவே பேசுவார்கள். அதில் ஒருவர்தான் நடிகர் ராதாரவி.
பேட்டி, சினிமா விழா தொடர்பான மேடைகள் என எல்லா இடத்தில் பல நடிகர்களை பற்றிய உண்மைகளை அப்படியே போட்டு உடைத்துவிடுவார். சில சமயம் அது சர்ச்சையாகவும் முடியும். சினிமாவில் மனதில் பட்டத்தை பேசும் நடிகர்களில் ரஜினியும் ஒருவர். ஆனால், அவரிடம் ராதாராவி பேசிய ஒரு விஷயத்தைத்தான் இப்போது பார்க்க போகிறோம்.
ரஜினியின் மனிதன் படமும், கமல்ஹாசனின் நாயகன் படம் ஒன்றாக வெளியானது. சில நாட்கள் கழித்து ரஜினியை சந்தித்த ராதாரவி ‘நாயகன்னு ஒரு படம் பார்த்தேன் சார்.. என்னா படம் சார்!.. அழுதுவிட்டேன்’ எனக்கூறியுள்ளார். அதற்கு ரஜினி ‘அப்டியா?’ என அவருக்கு உரிய ஸ்டைல் மற்றும் ஆச்சர்யமாக கேட்டாராம். அடுத்து இன்னைக்கு ஒரு படம் பார்த்தேன் சார்.. கொல்லலாமா என தோன்றியது என ராதாரவி கூற ‘அது என்ன படம்?’ என ரஜினி கேட்க ‘மனிதன்’ என்றாராம் ராதாரவி.
‘ஏப்பா அது நான் நடிச்ச படம்’ என ரஜினி டென்ஷன் ஆக ‘ஆமா சார். கொல்லலாமா என தோன்றியது. அது என்ன படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் குண்டு மாதிரி சட்டையில் தொங்க வச்சிகிட்டு வறீங்க.. நீங்க அதலாம் செய்யக்கூடாது சார். தண்ணியில பட்டா அது வெடிச்சிடும் சார்’ என ராதாரவி சொல்ல அதற்கும் ரஜினி ‘அப்படியா?’ என்றாராம் ஸ்டைலாக.
இது கூட தெரியாமத்தான் அதுல நடிச்சீங்களா?.. உங்களை நிறைய பேர் ஃபாலோ செய்கிறார்கள். இப்படி நடித்தால் உங்களை பார்த்து பலரும் குண்டை சட்டையில் தொங்கவிட்டு நடிப்பார்கள்’ என கலாய்த்தாராம் ராதாரவி. நான் இப்படி சொன்னதும் ரஜினி டென்ஷன் ஆகிவிட்டார் என மேடையில் ராதாரவி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: கேட்ட சம்பளத்தை தராததால் 13 வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை…