Cinema History
ஆமா எங்கப்பா 5 பொம்பளைய வச்சிருந்தார்!.. ஆனா!. ராதாரவி பகிர்ந்த ரகசியம்…
திரையுலகில் அசத்தல் வில்லனாகவும், குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராகவும் வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா. கரகரப்பான குரலில் தலையை ஆட்டி ஆட்டி அவர் பேசும் மேனரிசம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவில் நுழைந்தவர் இவர். இவரின் ரத்தக்கண்ணீர் படம் எப்போதும் பேசப்படும் ஒரு படமாக இருக்கிறது. இப்போதும் சமூகவலைத்தளங்களில் இந்த படத்தின் சில காட்சிகள் வீடியோக்களாக வெளியாகிக்கொண்டே வருகிறது.
எம்.ஜி.ஆரின் பல படங்களில் இவர் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் கலக்கியுள்ளார். அதேநேரம் ஒரு பிரச்சனையில் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையிலும் சிக்கினார். சில வருடங்கள் சிறையிலும் இருந்தார். சிவாஜியுடனும் பல படங்களில் எம்.ஆர்.ராதா நடித்துள்ளார்.
இவரின் வசனத்திற்காகவும், அதை அவர் பேசும் ஸ்டைலுக்காகவுமே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இவரின் மகன் எம்.ஆர்.வாசு பல படங்களில் நடித்தவர். அதேபோல், அவரின் மகன் வாசு விக்ரம் பல படங்களில் நடித்துள்ளா.ர் அதேபோல், ராதாரவி, ராதிகா,நிரோஷா என பலரும் சினிமாவில்தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ராதாரவி ‘எங்கள் குடும்பத்தை கட்டி காப்பாற்றியது எங்கள் அம்மா தனலட்சுமி அம்மாதான். என் அப்பா சிறையில் இருக்கும்போது என் அம்மா பேருந்து பிடித்து அவரை பார்க்க செல்வார். அப்போது நான் பனிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். எங்கேயும் தன்னை எம்.ஆர்.ராதாவின் மனைவியாக காட்டிக்கொள்ள மாட்டார். என் அப்பா 5 பெண்களுடன் தொடர்பு வைத்து அவர்களை திருமணம் செய்து தனித்தனியாக குடும்பம் நடத்தினார்.
அவர் இருக்கும் வரை எல்லோரையும் நன்றாகவே பார்த்துக்கொண்டார். அவரின் மறைவுக்கு பின் என் அம்மா எல்லோரையும் அரவணைத்தார். ஒரே வீட்டில் எல்லோரும் ஒன்றாக கூட இருந்தோம். யாருக்குள்ளும் சண்டையோ சச்சரவோ வந்தது கிடையாது. ஒருமுறை ஒரு சிறிய பிரச்சனை வந்தது. உடனே என் அம்மா எல்லோரையும் கையெழுத்து போட்டு கொடுக்க சொன்னார். ஒரு சொத்தை கொடுத்துவிட்டோம். ராதிகாவின் அம்மா கடைசியாக வந்து எங்களிடம் சேர்ந்து கொண்டார்’ என ராதாரவி பேசியிருந்தார்.