கர்ணன் என்ன கர்ணன்.. இந்தப்படம் அதுக்கும் மேல இருக்கும்..!

by adminram |   ( Updated:2021-09-23 16:24:04  )
ruthra-thandavam
X

'திரௌபதி' என்ற சர்ச்சைக்குரிய படத்திற்குப் பின் மோகன் ஜி இயக்கியுள்ள புதிய படம் 'ருத்ர தாண்டவம்'. இப்படத்தை மோகன் ஜி மோகன் ஜி தயாரித்து இயக்கியுள்ளார். திரௌபதி படத்தில் நாயகனாக நடித்த ரிச்சர்ட்தான் இப்படத்திலும் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்கள்தவிர நடிகர் ராதாரவி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜுபின் இசையமைத்துள்ள இப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

rdha-ravi

இப்படம் குறித்து பேசிய ராதா ரவி, இந்தப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தவுடன் முதலில் மறுத்தேன். ஏனென்றால் முன்னதாக ருத்ரதாண்டவம் என்ற பெயரில் வி.கே. ராமசாமி, நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். அதனால்தான் இப்படத்தில் நடிக்க மறுத்தேன்.

பின்னர் இயக்குனர் இப்படத்தில் நான்தான் நடிக்கவேண்டும் என கூறியபோது நான் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக கேட்டேன். அதைக்கேட்டு சென்றவர்தான், பின்னர் திரும்ப வரவே இல்லை. அதன் பின்னர் அவரே ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார், அதன் பின்தான் இப்படத்தில் நடித்தேன்.

தனுஷ் நடித்திருந்த 'கர்ணன்' படம் ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி பேசியிருந்தது. ஆனால், தனுஷ் நடித்ததால் அப்படம் வெற்றிபெற்றது. இப்படம் எந்த சாதியைப் பற்றியும் பேசவில்லை, இது ஒரு பொதுவான படம். இப்படத்தில் ரிச்சர்ட் நடித்துள்ளார். ஆனாலும், இப்படம் கர்ணனை விட இரண்டு மடங்கு அதிகமாக வரவேற்பை பெறும் என்றார்.

Next Story