விஜய் படத்துல என்னை மிரட்டி நடிக்க வச்சார் எஸ்.ஏ.சி!.. பொசுக்குன்னு சொல்லிப்புட்டாரே ராதாரவி...
திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாரவி. சுமார் 40 வருடங்களுக்கும் மேல் இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர். கதாநாயகனின் நண்பன், கதாநாயகியின் அண்ணன், வில்லன், அப்பா, குணச்சித்திர வேடம், அரசியல்வாதி என பல வேடங்களில் நடித்து அசத்தியவர் இவர். இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஒருபக்கம் சினிமா தொடர்பான விழாக்களில் பேசும்போது மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். சில சமயம் அது சர்ச்சையாகி விடும். இப்படித்தான் ஒருமுறை ‘நயன்தாராவெல்லாம் சீதாவாக நடித்தால் எப்படி?’ எனப்பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு மேடையில் பேசும்போது ‘விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கு 80 வயது ஆகிறது. ஆனாலும், சுறுசுறுப்பாக இருக்கிறார். விஜய் முதன் முதலாக நடித்த ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் என்னை மிரட்டி நடிக்க வைத்தார்.
என்னிடத்தில் அவருக்கு அவ்வளவு உரிமை. நானும் கால்ஷீட் கொடுத்துவிட்டேன். அப்படத்தில் நான் விஜயின் அப்பாவாக நடித்திருப்பேன். அப்படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் என்னை நடிக்க செல்ல அனுமதிக்க மாட்டார். என்னை அதட்டியே வேலை வாங்கினார்’ என ராதாரவி பேசினார்.
இதையும் படிங்க: கிளுகிளுப்பு உடையில் கில்மா போஸ்!.. கடற்கரையில் காத்து வாங்கும் அமைரா தஸ்தூர்..