எவன்டா அடிச்சது!… ராதாரவியும், வாகை சந்திரசேகரும் விஜயகாந்துக்காக செய்த தரமான சம்பவம்!…

Published on: January 20, 2024
---Advertisement---

Vijayakanth: மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலரும் தங்களுக்கு விஜயகாந்துடன் இருந்த அனுபவத்தினை பகிர்ந்துகொண்டனர். அதில் அவரின் ஆருயிர் நண்பரும், நடிகருமான ராதாரவி சொல்லி இருக்கும் சில தகவல்கள் வைரலாகி இருக்கிறது.

ராதாரவி பேசும் போது, விஜயகாந்துக்காக இதை செய்துகொண்டு இருக்கும் பலருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நானும், விஜியும், சந்திரசேகரும் ஒன்றாக சந்தித்தோம். அந்த நேரத்தில் வாகையார் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்கள் இருவரும் சென்றனர். அப்போ எனக்கு ஷூட்டிங் இருந்தது. 

இதையும் படிங்க: கோடிகளை கொட்டி கொடுத்தாலும் செய்ய மாட்டேன்!. விஜயகாந்த் ஃபாலோ பண்ண 5 விஷயங்கள்..

விஜிக்கும் சிவாஜிக்கும் என்ன சம்மந்தம்? அவருக்காக கடைசி வரை நின்றான். நான், விஜயகாந்த், வாகையார், எஸ்.எஸ்.சந்திரன் எல்லாம் ஒரு டீம். நான் போய் அவன் செய்வான் என நினைத்தேன். ஆனால் எங்களை செய்துவிட்டானே.

ஒருமுறை ரோகினி லாட்ஜில் அவனை பிடிக்காதவர்கள் கல்லை விட்டு எறிந்தனர். இதை கேட்ட நானும், வாகையாரும் நேராக லாட்ஜுக்கு சென்றோம். எவன் டா அவன்? என ஆரம்பித்தோம். அவனை கண்டுப்பிடித்து நேராக அவன் பிரஸுக்கு போய் அடித்தோம். 

இதையும் படிங்க: விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..

உழவன் மகன் படத்தில் எனக்கு கால் அடிப்பட்டது. அப்போ நின்றுக்கொண்டே சண்டை போட்டேன். ஆனால் என் சம்பளத்தில் கை வைக்கவே கூடாதுனு சொன்னவன் விஜி. அவன் குடும்பத்துக்கு முன்னர் சினி உலகம் தான் முக்கியம். விட்டுக்கொடுக்கவே மாட்டான். அவன் பெருந்தன்மை எளிமை அவனுக்கு மட்டும் தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.