விஜயகாந்தை பார்க்க விட மாட்றாங்க!.....கதறி அழும் நடிகர் ராதாரவி.....
ரசிகர்களால் கேப்டன் என அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். தேமுதிக எனும் கட்சியை துவங்கி அரசியலும் கால் பதித்து தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர். ஆனால், உடல் நிலை காரணமாக கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
விஜயகாந்தை பொறுத்தவரை அவரால் சரியாக பேச முடியவில்லை மற்றும் மற்றவர் உதவியின்றி நடக்கவும் முடியாத நிலையில் இருக்கிறார். அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களை வைத்தே அவர் எப்படி இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும் தெரிய வருகிறது.
சமீபத்தில், அவரின் ஒரு புகைப்படம் வெளியானது. அதில், விஜயகாந்தின் தோற்றம், அவர் மிகவும் வயதானவர் போல் மாறியிருந்தார். அதோடு, மிகவும் உடல் மெலிந்தும் அவர் காணப்பட்டார். அவரின் இந்த தோற்றம் தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரையுலகினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவருடன் பல படங்களில் நடித்தவரும், அவரின் நெருங்கிய நண்பருமான ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘என் நண்பர் ஒருவர் அந்த புகைப்படத்தை எனக்கு அனுப்பி ‘யார் என தெரிகிறதா?’ எனக்கேட்டார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றேன். அது விஜயகாந்த் என அவர் கூறியதும் அதிர்ந்து போனேன். என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு தர்மம் செய்தான். அந்த தர்மம் அவனை காப்பாற்றவில்லை.
அந்த புகைப்படத்தை பார்த்தவுடன் விஜயகாந்தை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், அவரின் குடும்பத்தினர் எந்த பதிலும் கூறவில்லை. அவனை பார்க்க அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். ஏன் என தெரியவில்லை’ எனக்கூறி ராதாரவி அழுதார். மேலும், சமீபத்தில் கூட ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை டிவியில் பார்த்த போது விஜயகாந்தை நினைத்து அழுதேன் என ராதாரவி உருக்கமாக கூறினார்.
ராதாரவியும், விஜயகாந்தும் வாடா போடா நண்பர்கள் மேலும் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் ராதாரவியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.