எம்ஜிஆரை சுட்ட வழக்கில் எங்க குடும்பம் என்ன ஆனது தெரியுமா? முதன் முறையாக மனம் திறந்த ராதாரவி...
எம்.ஆர்.ராதா தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரும் ஆளுமையாக இருந்தார். எம்ஜிஆரும் எம்.ஆர்.ராதாவும் சம கால நடிகர்கள். இருவரும் சினிமாவில் கொடி கட்டி பறந்தனர். 1960களில் தொழில் முனையில் உச்சம் பெற்றவர்களாவும் திகழ்ந்து வந்தார்கள்.
1967 ஆம் ஆண்டு எம்.ஆர்.ராதா சென்னையில் இருந்த எம்ஜிஆரை பார்க்க சென்றார். அப்போது தன்னுடன் ஒரு கைத்துப்பாக்கியையும் எடுத்துச் சென்றார். பேசிக் கொண்டிருக்கும் போதே எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி எம்ஜிஆரை பார்த்து மூன்று முறை சுட்டார். இதில் பலத்த காயம் அடைந்த எம்ஜிஆர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த செய்தி சினிமா வட்டாரத்திற்கு மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் எம்.ஆர்.ராதா மீது ஒரு பெருங்கோபத்தையும் மக்கள் மத்தியில் எழுந்தது. அதன் பிறகு எம்.ஆர்.ராதா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
ஏன் சுட்டார் என்று என்பதை பற்றி பல வதந்திகள் எழுந்தன. இந்த நிலையில் எம்.ஆர்.ராதா ஜெயிலுக்கு போனபிறகு எங்கள் குடும்ப நிலை எப்படி இருந்தது என முதன் முறையாக ராதாரவி ஒரு பேட்டியில் மனம் திறந்திருக்கிறார்.
அதாவது ராதாரவியின் அம்மாவான தனலட்சுமிதான் குடும்பத்தை தாங்கி பிடித்தாராம். எம்.ஆர்.ராதா சிறையடைக்கப்பட்ட பிறகு அவரிடம் இருந்த 18 கார்களை வித்தாராம் தனலட்சுமி. மேலும் அவர்கள் குடும்பத்திற்கு உதவ யாரும் முன்வரவில்லையாம்.
அதன் பிறகு எம்.ஆர்.ராதாவின் மற்றொரு மனைவியான பேபி என்பவர்தான் பணம் காசுகள் கொடுத்து உதவினாராம். ராதாரவி பள்ளிக்கு சைக்கிளில் தான் போவாராம். மேலும் கார்களை விற்ற பிறகு ஜெயிலில் இருந்த தன் அப்பாவை பார்ப்பதற்கு தன் அம்மா பேருந்தில் தான் செல்வார் என்றும் கூறினார்.
மேலும் எம்.ஆர்.ராதா 5 பேரை கல்யாணம் செய்திருந்தார் என்றும் அவர்களை இன்று வரை ஒற்றுமையாக நடத்துவதற்கு காரணம் என் அம்மாவான தனலட்சுமி தான் என்றும் ராதாரவி கூறினார். கடைசியாக வந்து சேர்ந்ததுதான் ராதிகாவின் அம்மா, அவரையும் நன்றாகத்தான் பார்த்தோம் என்றும் கூறினார்.