நான் எம்.ஆர்.ராதா மகன்! அப்படியெல்லாம் நடிச்சுருவேனா? கமல் படத்தில் நடிக்க மறுத்த ராதாரவி
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலேயே நடித்து ஒரு முக்கிய நடிகராக மாறியவர்தான் நடிகர் ராதாரவி. தனது அப்பாவிற்கு உரிய அந்த கனத்த குரலில் சிம்ம குரலில் தன் நடிப்பையும் வெளிப்படுத்தி அதே குணாதிசயங்களுடன் வலம் வந்தவர் ராதாரவி. எம் ஆர் ராதாவின் தைரியம் சிந்தனைப் போக்கு என எல்லாமும் ஆக நடிகராக இருந்தவர் ராதா ரவி.
இவர் பெரும்பாலும் வில்லனாகவே நடித்து கலக்கியவர். செல்லமே என்ற ஒரு சீரியலில் மட்டுமே நடித்திருக்கிறார். அதுவும் போக பல பிரபலங்களின் மீதான சர்ச்சைக்குரிய விமர்சனங்களுக்கும் பெயர் பெற்றவர். அரசியலிலும் தன் ஆதிக்கத்தை ஒரு காலத்தில் செலுத்தியவர்.
ஆரம்பத்தில் நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய ராதாரவி இன்னும் நாடகங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டுதான் வருகிறார். டி ராஜேந்தர் ராதா ரவியை உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். ஆனால் அந்தப் படத்தில் ராதாரவியை அவரது தந்தையைப் போல பேச வைத்து அனைவரையுமே தலைநிமிர்ந்து பார்க்க வைத்தவர் எஸ் எஸ் சந்திரன்.
ராதாரவி சினிமா வாழ்க்கையில் அவருக்கு முக்கியமாக அமைந்த படங்கள் வைதேகி காத்திருந்தால், உயர்ந்த உள்ளம் ,குரு சிஷ்யன், ராஜாதி ராஜா ,சோலைக்குயில், அண்ணாமலை, உழைப்பாலி, சின்னத்தம்பி போன்ற படங்களாகும். இந்த நிலையில் ராதாரவி தன்னுடைய சினிமா அனுபவம் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை கூறி இருக்கிறார்.
ரெங்கராஜன் இயக்கத்தில் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படத்தில் நடிப்பதற்காக ராதாரவியையும் எஸ் எஸ் சந்திரன் அவருடைய மகனையும் அணுகினார்களாம் .அப்போது இருவரிடமே ஸ்கிரிப்ட் பேப்பரை கையில் கொடுத்து ஆடிசன் மாதிரி பேச சொல்லி இருக்கிறார்கள். ஆனால் ராதாரவி எங்களுக்கு ஆடிசனா என்ற முறையில் அந்த பேப்பரை கையில் கொடுத்து விட்டு கிளம்பி வந்து விட்டார்களாம். இதைப் பற்றி அந்த பேட்டியில் கூறும் போது எம்.ஆர். ராதாவின் மகன் ஒரு பக்கம் எஸ். எஸ் .சந்திரன் மகனின் ஒரு பக்கம் .இவர்களை பேச சொல்லி ஸ்கிரிப்ட்டை கையில் கொடுத்தால் நல்லாவா இருக்கிறது ?என்று சொல்லிவிட்டு அந்தப் படத்தின் ஹீரோ பிரதாப் போத்தனாம். அவரை இயக்குனரிடம் குறிப்பிட்டு முதலில் அவருக்கு தமிழ் தெரியுமா என்று சோதனை செய்து பார்த்தீர்களா? அதை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டாராம் ராதா ரவி.
இந்த நிலையில் அதே ரங்கராஜனுக்கு நட்பின் ரீதியாக கமல் இலவசமாக நடித்துக் கொடுத்த படம் மகராசன். அந்தப் படத்தில் நடிப்பதற்காக கமல் ராதாரவியை அணுகினாராம். ஆனால் ராதாரவி நடிக்க மறுத்துவிட்டாராம் .இதை அப்படியே ரங்கராஜனிடமும் ராதாரவி போய் சொல்லி இருக்கிறார் .இந்த மாதிரி கமல் என்னிடம் வந்து கேட்டார் என்றும் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் என்றும் ரங்கராஜனிடம் போய் கூறிவிட்டாராம். ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் முந்தைய சம்பவம் தான் என்று அந்த பேட்டியில் ராதாரவி கூறினார்.
இதையும் படிங்க : நம்பிக்கை இல்லாமல் இயக்குனர் கொடுத்த வாய்ப்பு… பாட்டெல்லாம் செம ஹிட்!.. மாஸ் காட்டிய வித்யாசாகர்!..