Cinema History
எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம்; கலைஞர் இல்லனா எம்.ஆர்.ராதா உயிரோடு இல்ல!. ராதாரவி பகீர் தகவல்!..
நாடக நடிகராக இருந்து சினிமாவில் நடிக்க துவங்கியவர் எம்.ஆர்.ராதா. ரத்தக்கண்ணீர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர். திரையுலகில் இருந்த சிறந்த நடிகர்களில் எம்.ஆர்.ராதாவும் ஒருவர். பல திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
1976ம் வருடம் திரையுலகில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி எனில் அது எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம்தான். எம்.ஜி.ஆர் நடித்த பெற்றால்தான் பிள்ளையா படத்தை எம்.ஆர்.ராதாவின் நண்பர் வாசு தயாரித்திருந்தார். இப்படத்தை தயாரிப்பதற்காக வாசுவுக்கு எம்.ஆர்.ராதா ஒரு லட்ச ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். படம் வெளியானபின் அந்த பணத்தை எம்.ஆர்.ரதா கேட்ட போது, எம்.ஜி.ஆரால் நிறைய செலவுகள் ஆகிவிட்டதாக வாசு கூறி இருக்கிறார். இதுகுறித்து ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரினை சந்திக்க எம்.ஆர். ராதா மற்றும் வாசு சென்றனர்.
அங்கு எம்.ஜி.ஆருக்கும், ராதாவுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினை எடுத்து எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டார். அதில் எம்.ஜி.ஆரின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. அதன்பின், எம்.ஆர்.ராதாதன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இருவரும் சிகிச்சைக்குப் பின்னர் உயிர் பிழைந்தனர். இந்த சம்பவத்தால் எம்.ஜி.ஆரின் குரல் மொத்தமாக பாதித்தது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய நடிகரும் எம்.ஆர்.ராதாவின் மகனுமான ராதாரவி ‘என் அப்பா எம்.ஜி.ஆரை சுட்டு விட்டார் சுட்டு விட்டார் என பேசுகிறார்கள். ஆனால், உண்மையில் அங்கு நடந்தது என யாருக்கும் தெரியாது. எம்.ஜி.ஆருக்கு ஒரு குண்டு. ஆனால், என் அப்பாவுக்கு இரண்டு குண்டு பாய்ந்தது. அவர் தலையில் சுட்டுக்கொண்டார் என்றால் கூட அவரின் கழுத்தில் சுட்டது யார்?.. சம்பவம் நடந்தவுடன் ரத்தக்கறையுடன் என் அப்பா சைத்தாப்பேட்டை காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுத்தார்.
அதன்பின்னரே எம்.ஜி.ஆர் தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது. சட்டப்படி முதலில் ஒருவர் புகார் கொடுத்துவிட்டால், அடுத்து புகார் கொடுப்பவர் குற்றவாளி. எம்.ஜி.ஆர் சுட்டத்தை என் அப்பாவே ஒப்புக்கொண்டார். அப்போது ஆட்சி மாறியிருந்தது. எனவே, எம்.ஜி.ஆருக்கு சாதகமாக ஆவணங்கள் மாறியது. என் அப்பா குற்றவாளி ஆக்கப்பட்டார். கலைஞர் கருணாநிதி இல்லையேல் என் அப்பாவை சிறையிலேயே கொன்றிருப்பார்கள். ஆட்சி மாற்றம்தான் எல்லாவற்றுக்கும் காரணம்’ என ராதாரவி கோபமாக பேசியிருந்தார்.
Video courtesy to behindwoods…