வில்லன் நடிகரான ராதாரவி தனது தந்தை ஒரு மாதிரியான ஆளு என்று தனது பேட்டியில் பேசியிருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் ராதாரவி. இவரது தந்தை எம் ஆர் ராதாவும் 70’ஸ் மற்றும் 80’ஸ் காலகட்டத்தில் பல படங்களில் வில்லனாக நடித்து அசதி இருகின்றார். எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையாக புகழப்பட்ட ஒரு நடிகர். எம் ஆர் ராதா தனது திரைப்படத்தில் பல கருத்துக்களை சாதாரணமாக சொல்லக்கூடியவர்.
அவரது மகன் ராதா ரவியும் சினிமாவில் வில்லனாகவே அறிமுகமாகி பல படங்களில் கொடூர வில்லனாக நடித்திருக்கின்றார். தற்போது ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். 71 வயதான போதிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த இவர் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார்.
சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த அவர் தனது தந்தை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அந்த பேட்டியில் செய்தியாளர் உங்கள் தந்தை ஒரு முற்போக்குவாதி. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் நீங்கள் எப்படி கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராதாரவி தெரிவித்ததாவது “இதெல்லாம் எப்படி கேள்வின்னு கேக்குறீங்க..
இந்த கேள்விய பஸ்ட் கேட்டதே தப்பு. எங்க அப்பாவுக்கு கடவுளை பிடிக்காது. அதனால அவரு சாமி கும்பிடல, எனக்கு புடிக்கும் நான் கும்பிடுகிறேன் அவ்வளவுதான். எல்லாத்துக்கும் எங்க அம்மா தான் காரணம். எங்க அப்பா ரொம்ப பிசியான நடிகர். அவரை பார்த்து பேசுறது என்கிறதே ரொம்ப அதிசயமா தான் இருக்கும். எப்போதும் சினிமாவில் நடிக்கப் போய்விடுவார். அப்படி இல்லை என்றால் நண்பர்களுடன் ரவுண்ட் டேபிளுக்கு சென்று விடுவார்.
அவர் ஒரு மாதிரியான ஆளு, எங்களுக்கு எல்லாமே எங்க அம்மா தான் சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்க. எங்க அம்மாவுக்கு நான் ரொம்ப நிறைய படிக்கணும் அப்படின்னு ஆசை. ஆனால் நான்தான் சினிமாவுக்கு வந்துட்டேன், அதனால எங்க அம்மாவோட ஆசை நிறைவேறாமல் போயிடுச்சு. எங்களுக்கு நல்லது கெட்டது எல்லாமே சொல்லிக் கொடுத்து வளர்த்தது எங்க அம்மா தான்” என்று அவர் பேசி இருந்தார்.
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…