என்ன பாத்ததும் கமல் முகத்த திருப்பிக்கிட்டார்.. இதுதான் எங்கள் உறவு!. போட்டு உடைத்த ராதாரவி..

by சிவா |   ( Updated:2023-05-09 01:09:06  )
radharavi
X

திரையுலகில் சிறந்த நடிகராக விளங்கிய எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி. இவரும் 35 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வருகிறார். ஹீரோ, ஹீரோவின் நண்பர், வில்லன், குணச்சித்திர வேடம் என பல வருடங்களாக சினிமாவில் கலக்கி வருகிறார். அப்பாவை போல் இல்லாவிட்டாலும் இவரும் பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மேலும், தனது பேச்சுகளால் பல சர்ச்சைகளிலும் சிக்கியவர். மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மேடைகளில் பேசும் பழக்கம் கொண்டவர் இவர். அதனால், திரையுலகை சேர்ந்த பலரின் கோபத்திற்கும் இவர் ஆளாவதுண்டு. ஆனாலும், இவர் தன்னை மாற்றிக்கொள்வதில்லை. ஊடகங்களில் அதிக பேட்டிகளையும் அவர் கொடுத்து வருகிறார்.

radha

radha

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ராதாரவி கமல்ஹாசனுடனான தனது உறவுகள் பற்றி பேசியுள்ளார். கமலும் நானும் நண்பர்கள்தான். அவருடன் சில படங்களில் நடித்துள்ளேன். ஆனால், நெருக்கமான நண்பர்கள் கிடையாது. ஏதேனும் விழாவில் பார்த்தால் கூட பேசிக்கொள்ள மாட்டோம். ஒருமுறை விமான நிலையத்தில் இருவரும் இருந்தோம். அவர் என்னை பார்த்துவிட்டார். ஆனால், பார்க்காதது போல் இருந்தார். அதன்பின் அவரின் அருகில் நான் இருந்தபோது இப்போதுதான் என்னை பார்ப்பது போல் பாவனை செய்தார். ‘இப்போதுதான் என்னை பாக்குறீங்களா?’ என கிண்டலாக கேட்டேன். சிரித்துவிட்டு சென்றுவிட்டார். இவ்வளவுதான் எங்கள் உறவு..

என் மகன் கமலின் தீவிர ரசிகன். அவன் திருமணத்தில் கண்டிப்பாக அவர் கலந்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டான். என்னிடம் கமலை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க சொன்னான். ஆனால், ‘பலரிடம் பேசி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியெல்லாம் கமலை பார்க்க என்னால் போக முடியாது.. போடா’ என சொல்லிவிட்டேன்’ என ராதாரவி பேசியுள்ளார்.

Next Story