Categories: Cinema History Cinema News latest news

‘தண்ணி அடிப்பியா?’ன்னு வில்லன் நடிகரிடம் கேட்ட பாலசந்தர்… வந்ததோ அசால்டான பதில்

குணச்சித்திர நடிகர், வில்லன், அரசியல்வாதி என இரு கலக்கி வருபவர் ராதாரவி. பாலசந்தரின் மன்மத லீலை படத்தில் அறிமுகமானார். வில்லன் நடிகர் ராதாரவி திரைத்துறைக்கு வந்து இது பொன்விழா ஆண்டாகிறது. தனது திரையுலக அனுபவங்களை தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

பாலசந்தரே எனக்கு டைரக்டரா வருவாருன்னு நான் எதிர்பார்க்கல. அதுதான் மன்மத லீலை படவாய்ப்பு. அவரை நான் பார்த்ததும் இல்ல. கமல் சொல்லவும் காலகேத்ரா ஆபீஸில் போய் பாலசந்தரை நான் பார்க்கப் போறேன். எனக்கு இன்ட்ரஸ்டே இல்ல. கமல் எனக்கு நல்ல ப்ரண்ட். அவர் சொல்லிட்டாரேன்னு போனேன். அப்போ நான் காலேஜிக்குப் போன திமிரு. யப்பா எங்கப்பா இருக்காரு பாலசந்தரு சாரு?ன்னு கேட்டேன். உடனே ரவி சார் இங்கே வாங்கன்னு சொன்னாங்க.

Also Read

Radharavi

‘நீ தான் ராதாரவியா? சிகரெட் குடிப்பியா../’ ‘குடிப்பேன் சார்.’ ‘தண்ணீ அடிப்பியா…?’ ‘அடிப்பேன் சார்.’ ‘நான் எதுக்கு இந்த ரெண்டையும் சூட்டிங் நேரத்துல செய்யக்கூடாதுன்னு சொல்றேன்னா இப்போ தான் எனக்கு ஹார்ட் ஆபரேஷன் முடிஞ்சிருக்கு.

நீ அடிக்கிறதைப் பார்த்தா தூண்டப்படுவேன்’னு சொன்னார். ‘சரி சார். சிகரெட்டையும், தண்ணியையும் விட்டுரணும். அவ்வளவு தானே. விட்டுடுறேன்’னு சொன்னேன். ‘அந்த மூலையில இருந்து நடந்து காட்டு’ன்னு சொன்னார்.

நான் சொன்னேன். ‘நான் எம்.ஆர்.ராதாவோட பையன். என்னை நடிக்கிறதுக்குக் கூப்பிட்டுருக்கீங்க. அங்கேருந்து நட. இங்கேருந்து நடன்னு சொன்னா வேண்டாம் சார். என்னை விட்டுருங்க’ன்னு சொன்னேன்.

இதையும் படிங்க… ‘முடிஞ்சா எழுதிப்பாரு…’ பாடலாசிரியர்களுக்கு சவால் விட்ட இளையராஜா… அசத்திய வைரமுத்து

‘யோவ் நீ என்ன இப்படி பேசற?’ன்னு கேட்க, அப்படியே பேச்சு சூடுபிடிக்க, சரி போன்னு சொல்லிட்டாரு. உடனே கமல்கிட்ட போய் சொன்னேன். ‘நீ என்ன இப்படி பேசற?’ ‘அங்க நட, இங்க நடன்னு சொல்றாரு’ என்ற ராதாரவியிடம் ‘சினிமான்னா அப்படித்தான் சொல்வாங்க’ன்னு சொன்னாராம் கமல். இதுக்கு முன்னாடி 2 கன்னட படத்தில் நடித்தும் எதுவும் கேட்கல. இங்க மட்டும் ஏன் கேட்குறாங்கன்னு பார்த்தேன். அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. நல்ல பெர்பெக்ஷனுக்காக சொல்றாருன்னு. அப்புறம் நல்ல பழகிட்டோம் என்கிறார் ராதாரவி.

Published by
sankaran v