ராதிகாவை பார்த்ததும் ஆசையாக ஓடி வந்த ரசிகை! சுயரூபத்தை காட்டிய அம்மணி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Published on: July 1, 2023
rathika
---Advertisement---

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக பயணித்து இன்றும் மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் நடிகை ராதிகா. நடையில் எப்படி ரஜினியிடம் அந்த ஒரு ஸ்டைலை நாம் பார்த்து வியக்கிறோமோ நடிகைகளிடம் ஒரு கெத்தான ஸ்டைலை ராதிகாவிடம் காண முடியும். இயல்பாகவே தைரியமாகவும் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துடனும் இருப்பவர் நடிகை ராதிகா.

rathika1
rathika1

சில காலம் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சமீப காலமாக அம்மா வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நல்ல அந்தஸ்தை பெற்றிருக்கிறார் ராதிகா. சீரியலிலும் தடம் பதித்து வருகிறார். எந்த இயக்குனர் ஆனாலும் அவர்களை தைரியமாக எதிர்கொள்ளும் நடிகை என்றால் அது ராதிகா மட்டும்தான்.

இதையும் படிங்க : மழையால் இயக்குனரோடு கோவில் பக்கம் ஒதுங்கிய மீரா ஜாஸ்மின்… அங்கதான் சம்பவமே!..

80,90களில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மற்ற மொழி திரைப்படங்களிலும் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

rathika2
rathika2

90 வரை முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ராதிகா அதன் பிறகு குணச்சித்திர வேடங்களிலும் அம்மா வேடங்களிலும் திறம்பட நடித்தார். சின்னத்திரை பக்கம் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான ராடன் நிறுவனத்தின் சார்பாக சித்தி, அண்ணாமலை, செல்வி ,வாணி ராணி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை கொடுத்து குடும்பப் பெண்களையும் தன் வசம் இழுத்தார்.

இந்த நிலையில் ராதிகா இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று இருக்கிறார். பெருமானை தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது அவரை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருடன் புகைப்படம் எடுக்க ஆவலுடன் ஓடி வந்தனர்.

rathika3
rathika3

அதில் ஒரு பெண் ரசிகை ராதிகாவின் பின்னாடியே வந்து அவர் தோள் மீது கை போட்டு போட்டோ எடுக்க முற்படும்போது திடீரென்று ராதிகா எரிச்சலில் உச் கொட்டி விலகி விட்டார். மேலும் அவருடன் வந்தவர்களுள் சிலர் தொடாதீங்க தொடாதீங்க என்று சொல்லியே ராதிகாவை அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க : நானும் மணிரத்தினமும் தெருதெருவா அலைஞ்சோம்!.. ஒன்னும் கிடைக்கல… ஃபீல் பண்ணி பேசிய ரேவதி…

அதில் அந்தப் பெண் ரசிகை சற்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகின்றது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பெண் ரசிகை தானே? தோள் மீது புகைப்படம் எடுத்துக் கொண்டால் அதில் என்ன தவறு இருக்கிறது. பொது மேடைகளில் வியாக்கானமாக பேசும் ராதிகா இப்படி கோயிலில் நடந்து கொள்ளலாமா என்று கூறி வருகின்றனர்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.