பிரதாப் போத்தனை பழிவாங்க இப்படியெல்லாமா செய்வாங்க? சமுதாயம் குட்டிச்சுவர் ஆனதுக்கு காரணமே ராதிகாதான்

by Rohini |   ( Updated:2023-08-08 01:48:36  )
radhika
X

radhika

கோலிவுட்டில் சிங்கிள் டேக் நடிகையாக திகழப்பட்டவர் நடிகை ராதிகா. பாரதிராஜாவால் எத்தனையோ அழகிய நடிகைகள் அறிமுகமாயிருந்தாலும் அவர்களுக்கு நடுவில் இது பாரதிராஜாவின் அறிமுகமா என்று சந்தேகப்படும் அளவிற்கு அழகில் மிக மோசமாக இருந்தாராம் ஆரம்பகாலத்தில். கருப்பு நிறத்துடன் கொழுக் மொழுக் என்று ஒரு நடிகைக்கு உண்டான அந்தஸ்தே இல்லாமல் இருந்தாராம் ராதிகா.

அவரே ஒரு பேட்டியில் பாரதிராஜா அறிமுகத்திலேயே நான் தான் மிகவும் அசிங்கமானவள் என்று சொல்லியிருக்கிறார். கிழக்கே போகும் ரயில் படத்தில் தனது அறிமுகத்தை பதிவு செய்த ராதிகா தொடர்ந்து பல படங்களில் தன் திறமையை நிரூபித்திருக்கிறார்.

இதையும் படிங்க : விஜயகாந்துக்கு ஜோடின்னா தலைதெறிக்க ஓடிய நடிகைகள்!.. ராதிகா செய்த மேஜிக்..

அழகில் குறைவாக இருந்தாலும் நடிப்பில் அவரை அடிச்சுக்க யாரும் கிடையாது. அந்தளவுக்கு கோலோச்சி நின்றார். மேலும் சீரியலில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தினார். சமுதாயம் இந்தளவுக்கு குட்டிச்சுவர் ஆனதுக்கு காரணமே ராதிகா என்று பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ் கூறினார்.

ஏனெனில் எப்பொழுது சித்தி சீரியலை தயாரித்தாரோ அதன் பிறகே மக்களுக்கு சீரியலை பற்றி தெரியத் தொடங்கியது என்றும் அதன் மூலம் சீரியலே கதி என்று மக்கள் கிடக்கின்றனர் என்றும் எல்லா அபத்தங்களையும் சீரியலில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : எம்.ஆர்.ராதா மகள்னா சும்மாவா? துப்பாக்கியை காட்டி மிரட்டிய ராதிகா.. என்ன சம்பவம் தெரியுமா?

சித்தி சீரியலில் மாட்டியதுதான். இன்னும் அதிலிருந்து மக்கள் வெளிவரவே இல்லை என்றும் கூறினார். அதனால்தான் சமுதாயம் குட்டிச்சுவர் ஆனது என்று கூறினார். மேலும் நடிப்பில் பட்டையை கிளப்பினாலும் சொந்த வாழ்க்கையில் பல நெகட்டிவ்களை சந்தித்தார் என்று கூறினார்.

ராதிகாவின் முதல் கணவரான பிரதாப் போத்தன் காந்தராஜுக்கு நண்பராம். இருவரும் ஏன் கல்யாணம் பண்ணாங்கனும் தெரியாதாம். ஏன் பிரிஞ்சாங்கனும் தெரியாதாம். பிரிந்ததும் பிரதாப் போத்தன் வேறொருவரை திருமணம் செய்து குழந்தை பெற்று கொண்டாராம்.

இதையும் படிங்க : ராதிகாவை பார்த்ததும் ஆசையாக ஓடி வந்த ரசிகை! சுயரூபத்தை காட்டிய அம்மணி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

அவர் குழந்தை பெற்றுக் கொண்டாரே என்ற பொறாமையில் தான் லண்டனில் ஒருத்தரை பிடிச்சு திருமணம் செய்து இப்போது இருக்கும் ரயானை பெற்றெடுத்தாராம் ராதிகா. ஒரு போட்டியில் தான் இந்த திருமணத்தையே செய்தார் என்றும் இப்போது சரத்குமாரை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார் என்றும் காந்தராஜ் கூறினார்.

Next Story