More
Categories: Cinema News latest news

ரஜினிக்கு இணையான ஆளுனா அது இவங்கதான்! போற போக்குல அடுத்த சர்ச்சையை கிளப்பிய சரத்குமார்

ரஜினியின் ஜெய்லர் திரைப்படம்  வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான 4 நாள்களில் 200 கோடி வசூலை பெற்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது. படம் படு மாஸாக ரசிகர்களுக்கான விருந்தாகவே பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு சீனிலும் ரஜினி சொல்லி அடிக்க மாதிரியான காட்சிகளில் நடித்து ரசிகர்களை கூஸ் பம்பிலேயே வைத்தார். ஆக மொத்தம் தலைவரு நிரந்தரம் என்பதை பாட்டின் மூலமும் படத்தின் மூலமும் நிரூபித்திருக்கிறார் ரஜினி.

Advertising
Advertising

இதையும் படிங்க : அவசர புத்தியால் நிலைதடுமாறிய ரஜினி! ‘ராஜாதிராஜா’ படத்தில் ஏன் அந்தப் பாடல் இடம்பெறவில்லை தெரியுமா?

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆரம்பித்து படம் ரிலீஸ் ஆகிற வரைக்கும் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமான சம்பவங்களும் நடந்தேறி வருகின்றன.  இசை வெளியீட்டு விழாவில் காக்கா பருந்து கதையை சொல்லி இதை பத்திரிக்கை  நண்பர்கள் தயவு செய்து இவரைத்தான் சொன்னேன் என்று போட்டு விடாதீர்கள் என்று சூசகமாக சொன்னார் ரஜினி.

இதற்கெல்லாம் விதை போட்டவர் சரத்குமார். வாரிசு மேடையில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று சொன்னதில் இருந்து இன்று வரை அந்த பிரச்சினை பெரிய பூதாகரமாக கிளம்பியிருக்கிறது.

ரஜினிக்கும் இது பிரஸ்டீஜ் பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை கூறியிருக்கிறார் சரத்குமார். அதாவது ராதிகா சினிமாவிற்குள் வந்து 48 வருடங்கள் ஆகிவிட்டதாம்.

இதையும் படிங்க : மைக் மோகனுக்கு நடிக்கவே தெரியாது.. ஏதோ இளையராஜா புண்ணியத்தில் படம் ஓடுச்சு… ஷாக் கொடுத்த பிரபலம்

தென்னிந்திய சினிமாவின் முன்னனி  நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்த ராதிகாவை நாட்டின் தலை சிறந்த நடிகையாகவே பார்ப்பதாக சரத் கூறினார். மேலும் வெள்ளித்திரை மட்டுமில்லாது சின்னத்திரை, ஓடிடி என அனைத்து நிலைகளிலும் ஒரு முன்னிலை நடிகையாகவே இன்றுவரை ராதிகா பார்க்கப்படுகிறார் என்றும் பெருமையாக கூறினார்.

மேலும் ரஜினியே சினிமாவிற்குள் வந்து 47 வருடமோ 48 வருடமோ ஆகின்றது. ஆனால் ராதிகா 48 வருடமாக ஒரு தலைசிறந்த நடிகையாக ரஜினிக்கு இணையான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

Published by
Rohini

Recent Posts