Connect with us

யாஷ்க்காக சினிமாவை விட்டு கொடுத்த ராதிகா… ஓ இதான் காரணமா?….

Cinema News

யாஷ்க்காக சினிமாவை விட்டு கொடுத்த ராதிகா… ஓ இதான் காரணமா?….

யாஷ் என அறியப்பட்ட நவீன் குமார் கவுடா கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.. அவர் முக்கியமாக முன்னாள் தொலைக்காட்சி நடிகர் ஆ

வார்.

யாஷ் கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பூவனஹள்ளி என்ற கிராமத்தில் வொக்கலிகா குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை அருண் குமார் ஜே. கே.எஸ்.ஆர்.டி.சி போக்குவரத்து சேவையில் பணிபுரிந்தார்.அவரது தாயார் புஷ்பா ஒரு இல்லத்தரசி.நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.

நந்த கோகுல, உத்தராயணம்,சில்லி லல்லி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

ராதிகா பண்டிட் ஒரு இந்திய திரைப்படம் மற்றும் முன்னாள் தொலைக்காட்சி நடிகை. கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாக தன்னை நிறுவியுள்ளார்.

ஹுடுகரு (2011), ஆத்துரி (2012), ட்ராமா (2012), பகதூர் (2014) மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராமாச்சாரி(2014) போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். ராதிகாவிற்கு கௌரங் என்ற தம்பி  உள்ளது.

ராதிகா வணீக நிருவாகதில் முதுகலை பட்டம் பெற்றப்பின் ஆசிரியராக விருபினார். 2007இல் இளங்கலை பயிலும்போது, அவரது நண்பர் ஒருவர் வழியாக நந்தகோகுலா எனும் கன்னட தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்கத்துவங்கினார்.

2015 பெங்களூர் டைம்ஸ் கருத்துக் கணிப்பில், கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடைசியாக நடிகர் யாஷ்,ராதிகா பண்டிட்டுடன் இணைந்து நடித்த ராமாச்சாரி மற்றும் மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இது யஷ்-ராதிகா பண்டிட் ஜோடிக்கு பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. கன்னட சினிமாவில் யஷ்-ராதிகா பண்டிட் பொருத்தமான ஜோடி என்று பேசப்பட்டு வந்தது.

முதல் சந்திப்பு:

2004 ஆம் ஆண்டு, ‘நந்த கோகுல’ நிகழ்ச்சியின் செட்டில் தான் யாஷ் ராதிகாவை முதன்முதலில் பார்த்திருக்கிறார்.2008 இல் அவர்களின் முதல் படமான ‘மொக்கின மனசு’ படத்திலும் இணைந்தனர்

2012 ஆம் ஆண்டில், ‘டிராமா’ படத்தில் யாஷ் நடிக்க , பெண் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்தார். ‘டிராமா’ படத்தில் தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்தனர். இருவருக்கு இடையில் இருந்த நட்பு காதலாக மாறியது.

யாஷ் 2016 இல் தனது சக நடிகையான ராதிகா பண்டிட்டை திருமணம் செய்து

 கொண்டார்.

டிசம்பர் 2, 2018 அன்று, யாஷ் – ராதிகா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் அய்ரா. அதையடுத்து ஓராண்டுக்குப் பின் அக்டோபர் 30, 2019 இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.

யாஷ் அவர்களின் மனைவியான ராதிகா பண்டிட் முன்னணி நடிகையாக இருந்த போதும் திருமணத்திற்கு பின் படங்களில் நடிக்க வில்லை.வீடு குழந்தைகள் என தனது உலகத்தை மாற்றி அமைத்துக்கொண்டுள்ளார்.

ஆனால் நடிகர் யாஷ் ,தனது மனைவி திரையுலகில் மறுபடியும் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.அப்படி ராதிகா நடித்த படம் தான் 2019 ல் வெளியான ஆதி லட்சுமி புராணா .

காதலுக்கு இலக்கணமாக இருவரும் ஒருமித்து வாழ்ந்து வருகின்றனர்..

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top