ராதிகா உனக்கு மனைவியாக இருக்க மாட்டார்... விஜயகாந்த் காதலில் கல்லை தூக்கி போட்ட நண்பர்கள்.. ஷாக் தகவல்
தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் நடிகர் காதலிப்பது புதிது இல்லை. அதில் சில ஜோடிகள் தான் திருமணம் செய்து கொள்வார்கள். சிலருக்கு காதல் சமயத்திலேயே முறிவு ஏற்பட்டு விடும். இதுபோல நடிகை ராதிகா மற்றும் விஜயகாந்தும் காதலித்து இருக்கிறார்கள் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது.
கிழக்கே போகும் ரயில் படம் மூலம் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ராதிகா. அதே நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். கமல், ரஜினிகாந்திற்கு அடுத்த படியாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
நீதியின் மறுபக்கம் படத்தின் மூலம் ராதிகா மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்திலேயே இருவருக்கும் நல்ல நெருக்கம் உருவாகியதாம். தொடர்ச்சியாக 10க்கும் அதிகமான படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
தொடர்ச்சியாக விஜயகாந்த் மீது காதலில் விழுந்தார் ராதிகா. கிராமத்து ஆளாக இருந்தவரை படு மார்டனாக மாற்றியதும் ராதிகா தானாம். விஜயகாந்தும் ராதிகாவை காதலிக்க சரி திருமணம் செய்து கொள்ளலாம் என திருமண பணிகளை துவக்கி இருக்கிறார்கள்.
ராதிகா தனது திருமண புடவையை கூட எடுத்து விட்டாராம். ஆனால் விஜயகாந்தின் நண்பர்கள் ராதிகா உனக்கு சிறந்த மனைவியாக இருக்க மாட்டார் என ஜாதகத்தில் இருப்பதாக கூறி திருமணத்தை நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. காதல் முறிவால் ராதிகா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.