பயில்வானை கொடூரமாக தாக்கிய ராதிகா?? உண்மையில் நடந்த சம்பவம் என்ன??
நடிகரும் பிரபல சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர். இவரது வீடியோக்களில் பல நடிகைகளை பற்றி பேசுவது எப்போதும் சர்ச்சையில் போய் முடியும்.
சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர். மேலும் பயில்வான் ரங்கநாதன் சினிமா விழாக்களில் பல இயக்குனர்களிடம் எழுப்பிய கேள்விகளும் மிகவும் வைரல் ஆகியது. குறிப்பாக இயக்குனர் பாலா தயாரித்த “பிசாசு” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் “பிசாசு என்று படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதனால் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறீர்களா?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த பாலா “பிசாசு என்றால் கருப்பாகத்தான் இருக்க வேண்டுமா? பிங்க் கலர் சட்டை கூட அணிந்திருக்கலாம்” என பயிவான் ரங்கநாதன் அணிந்து வந்த சட்டையை குறிப்பிட்டு கேலியாக பதிலளித்தார். இந்த வீடியோ இப்போது வரை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இவ்வாறு பல சர்ச்சைக்கு பெயர் போனவர் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜன் “பயில்வான் ரங்கநாதன் ராதிகா சரத்குமாரை குறித்து அவதூறாக பேசினார். அதன் பின் ஒரு முறை பெசன்ட் நகர் கடற்கரையில் பொது மக்கள் மத்தியில் பயில்வானை காலில் கிடந்ததை எடுத்து அடித்தார் ராதிகா” என கூறினார்.
இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் பேசிய பயில்வான் ரங்கநாதன் “ராதிகா பெசண்ட் நகர் கடற்கரையில் வைத்து என்னை அடித்தார் என ராஜன் கூறுகிறார். ஆனால் ராதிகாவுக்கும் எனக்கும் வாய்ச்சண்டைதான் நடந்ததே தவிர, யாரும் யாரையும் அடிக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் நடந்தது பெசண்ட் நகர் கடற்கரையில் இல்லை. திருவான்மியூர் கடற்கரையில்” என இச்சம்பவத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.
இப்படித்தான் சமீபத்தில் ஒரு கடற்கரையில் ரேகா நாயருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கு பெரும் விவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவவும் செய்தது.