Cinema News
சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்!…வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய புகைப்படங்கள்….
மாநாடு படத்திற்கு பின் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். ஏற்கனவே இப்படம் தொடர்பான புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி என்பவர் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்களை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து எனது செகண்ட் செட்யூல் சிம்புவுடன் துவக்கம் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் சிம்பு, கவுதம் மேனன், ராதிகா மற்றும் சிம்புவின் தங்கையாக நடிக்கும் சிறுமியும் இடம் பெற்றுள்ளார்.