யோவ் நாடு தாங்காதுயா!..சிம்பு பண்ண அந்த காரியம்!..ஷாக் ஆன ராதிகா!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை என்.கிருஷ்ணன் இயக்க சிம்புவுடன் இணைந்து நடிகர் கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.
மேலும் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த நிலையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ படம் 50 நாள்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் 50 வது வெற்றி நாளை படக்குழு நேற்று கொண்டாடியது.
இதையும் படிங்க : “தமிழர்களை கேவலப்படுத்தாதீங்க”… ஹிந்தி படத்துக்கு சத்யராஜ் போட்ட கண்டிஷன்…
விழாவில் பேசிய நடிகை ராதிகா சிம்புவை பற்றி பல அறியாத தகவல்களை தெரிவித்தார். என்னவென்றால் ஒரு சமயம் சிம்புவின் அம்மா நடிகை உஷா ராதிகாவிடம் ‘ராதிகா கொஞ்சம் சிம்புவை திட்டு, என்ன சொன்னாலும் கேட்க மாட்டிக்கிறான்’ என்று ராதிகாவிடம் கூறினாராம். உடனே ராதிகா சிம்புவிடம் ‘சிம்பு உன் பலம் எது என்று தெரியாமலே இருக்கிற, கண்டிப்பா நீ ஒரு நாள் வருவ’ என்று கூறியதாக சொன்னாராம்.
மேலும் அவர் கூறும்போது ‘சிம்பு எப்படியெல்லாம் மாறியிருக்கிறார் தெரியுமா? நான் சூட்டிங் போகும் போது எனக்கு முன்னாடியே வந்து உட்கார்ந்திருந்தார். அது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஒரு ஹோட்டலில் நாங்கள் தங்கியிருந்த போது தினமும் 5 மணிக்கு எழுந்து நான் உடற்பயிற்சி செய்வது வழக்கம். ஆனால் அதற்கு முன்பாகவே சிம்பு எழுந்து தியானம் பண்ணிக் கொண்டிருந்தார். அட டேய் நாடு தாங்காதுடா என்று அவரிடமே கூறினேன்’ என்று சிம்புவின் மாற்றத்தை அடுக்கடுக்காக கூறினார் நடிகை ராதிகா.