Connect with us

பாம்பை கண்டு பதறி பிரபல நடிகரின் முதுகில் ஏறிய முன்னணி நடிகை…..!

radhika

Cinema News

பாம்பை கண்டு பதறி பிரபல நடிகரின் முதுகில் ஏறிய முன்னணி நடிகை…..!

கொரோனா தொற்றுக்கு பின்னர் தற்போது திரையரங்குகளை விட ஓடிடி தளங்கள் அதிகரித்து விட்டன. ஏற்கனவே பல ஓடிடி தளங்கள் உள்ள நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவரான அல்லு அரவிந்த் ஆஹா என்ற பெயரில் புதிய ஒடிடி தளம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

முதலில் தெலுங்கில் மட்டுமே தொடங்கப்பட்ட இந்த ஓடிடி தளத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்போது தமிழிலும் அறிமுகம் செய்துள்ளனர். இதன் அறிமுக விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் கலந்துகொண்டார்.

chirtanjeevi

chirtanjeevi

அப்போது பேசிய நடிகை ராதிகா அல்லு அரவிந்த் தயாரிப்பில் நடித்தபோது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் கூறியதாவது, “அல்லு அரவிந்த் சாருடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. அவர் பல படங்கள் எடுத்துள்ளார். அதில் என்னையும் சிரஞ்சீவி சாரையும் வைத்து எடுத்த ஒரு படத்தில் நான் பாம்புடன் நடிக்க வேண்டும்.

ஆனால் பாம்பு என்றால் எனக்கு பயம். அதனால் அந்த காட்சியில் நடிக்க மறுத்து விட்டேன். ஆனால் அல்லு அரவிந்த் சார் அதெல்லாம் ஒன்னும் இல்லை நீ வந்து நடி என்று சொல்லியதால் நான் சென்றேன். அப்போது சுமார் 1000 பாம்புகளை திறந்துவிட்டார். இதனால் அவரை கோபத்தில் கண்டபடி திட்டிவிட்டேன்.

ஆனால் அவர் ஒரு நிமிடம் வாயை மூடி நில் ஷாட் ஓகே ஆகிவிடும் என்று சொன்னார். ஆனால் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது என்னை சமாதானப்படுத்த சிரஞ்சீவி சாரை அனுப்பினார். அவர் என் அருகில் வந்ததும், நான் அவர் முதுகில் ஏறிக்கொண்டு என்னை எப்படியாவது வெளியில் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் என்று கத்த ஆரம்பித்தேன். இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது” என கூறியுள்ளார்.

பாம்புகளை கண்டு பயந்து தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி முதுகில் நடிகை ராதிகா ஏறிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நகைப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top