எம்.ஆர்.ராதா மகள்னா சும்மாவா? துப்பாக்கியை காட்டி மிரட்டிய ராதிகா.. என்ன சம்பவம் தெரியுமா?

by Rohini |
radhika
X

radhika

தமிழ் சினிமாவில் ஒரு லட்சிய நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராதிகா. மிகவும் தைரியமான , எதையும் துணிந்து எதிர்கொள்வதுமான இயல்பை கொண்டவர் நடிகை ராதிகா. ஒரு நடிகையாக தயாரிப்பாளராக அரசியல்வாதியாக தன்னுடைய பரிணாமங்களை கொண்டு விளங்குகிறார் ராதிகா.

சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்தவர். தன்னுடைய ரேடான் நிறுவனம் மூலம் பல வெற்றி தொடர்களை வழங்கியிருக்கிறார். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார். 1980 -90களில் முன்னனி நடிகையாக வலம் வந்த ராதிகா கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகமானார்.

rathika1

rathika1

முதல் படத்திலேயே தான் யார் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர். மேலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து கமல், ரஜினி என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து தன் திறமையை காட்டியவர். நடிப்பு இளவரசி என்று கூட சொல்லலாம். சாவித்திரிக்கு பிறகு நடிப்பில் ராதிகாவைத்தான் குறிப்பிட்டு சொல்வார்கள்.

ராதிகாவிற்கு இந்த அளவு தைரியம் அவரது அப்பாவின் ஜீனிலிருந்தே வந்தது என்று சொல்லலாம். நடிக வேள் எம்.ஆர். ராதா எப்படி தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவாரோ அதே போல் தான் ராதிகாவும் எதற்கும் பயப்படாமல் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவாராம்.

பத்திரிக்கை ஊடகங்கள் கூட தவறாக எதுவும் பேசினாலோ எழுதினாலோ உடனே அவர்களை அழைத்து நேருக்கு நேராக முகத்துக்கு எதிராக கேட்டிருக்கிறாராம். அப்படி ஒரு பத்திரிக்கை ராதிகாவை பேட்டி எடுக்க சென்றிருக்கிறது. அவரை பேட்டி எடுத்தவரே பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலுதானாம்.

பேட்டி எடுக்கும் போது சில முரண்பாடான கேள்விகளை கேட்க சொல்லியிருக்கின்றனர். அவரும் கேட்க மறு நாள் பத்திரிக்கையை பார்த்த ராதிகாவிற்கு கோபம் தலைக்கேறி விட்டதாம். ஏனெனில் அந்த பத்திரிக்கையில் வேறுமாதிரியான ஒரு தலைப்பில் ராதிகாவின் வேறொரு மாதிரியான புகைப்படத்தை போட்டிருக்கின்றனர்.

radhika2

radhika2

அதை பார்த்ததும் ராதிகா செய்யாறு பாலுவுக்கு போன் செய்து தலைப்பு ஒருமாதிரியா போட்டு செய்தி வேறொரு மாதிரியாக இருக்கிறதே என்று கேட்டிருக்கிறார். அதற்கு செய்யாறு பாலு எட்டிடோரியலில் மாற்றியிருக்கிறார்கள் என்று சொல்ல அதற்கு ராதிகா ‘இப்படியே எதாவது பேசிக்கிட்டே இருந்தா துப்பாக்கிய வச்சு சூட் பண்ணியிருவேன்’ என்று சொல்லி மிரட்டினாராம்.

அதற்கு செய்யாறு பாலு ‘எம்.ஆர்.ராதா மகள் கையால குண்டடி பட்டு சாகறது பெருமைதான்’ என்று சொல்ல மேலும் கோபத்தில் போனை கட் செய்து விட்டாராம் ராதிகா. இதை செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story