நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக ராதிகா நடிப்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் அப்டேட் குறித்து நேற்றைய அறிவிப்பு வெளியானது. இப்போது அந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு ஆகச் சிறந்த நடிகையாக வலம் வருபவர் ராதிகா.
கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து பிற மொழிகளிலும் ஒரு முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதை திறம்பட செய்து கொடுப்பவர் ராதிகா , தற்போது அவர் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி என்ற படத்தில் நடிக்கிறார் ராதிகா.
அவருடைய கெரியரில் இதுவரை ராதிகா இப்படி ஒரு கேரக்டர் நடித்ததில்லை என சிவகார்த்திகேயன் தன்னுடைய பதிவில் பதிவிட்டிருக்கிறார். போஸ்டரில் மிகவும் வயதான ஒரு தோற்றத்தில் ராதிகா காணப்படுகிறார். இது அப்படியே ஜீன்ஸ் படத்தில் இரண்டு நாசரில் ஒரு நாசருக்கு மனைவியாக வருவார் ராதிகா. அதில் கணவனுக்கு அடங்காத ஒரு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அந்த தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் தாய்க்கிழவி படத்திலும் அவருடைய தோற்றம் அமைந்துள்ளது. இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி 20ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சிவக்குமார் இயக்க நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் பாலா, முத்துக்குமார், ரெபக்கா, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு விவேக் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே ப்ரொடக்ஷன் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். படத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து பொழைக்கும் ஒரு பாட்டியாக நடித்திருக்கிறார் ராதிகா. அதன் டீஸரை பார்க்கும் போது காமெடியாகவும் செண்டிமெண்ட்டாகவும் படம் இருக்கும் என்றே தெரிகிறது. ஆனால் ராதிகாவின் பக்கா டிரான்ஸ்ஃபர்மேஷன் என்றே சொல்லலாம்.
இதோ அந்த டீஸர்:
