குருவை மிஞ்சிய சிஷ்யன்.. ரஜினியை தொடர்ந்து ‘பிதாமகன்’ தயாரிப்பாளருக்கு உதவிக்கரம் நீட்டிய லாரன்ஸ்..
சமீப நாள்களாக சென்ஷேசனல் நியூஸாக வலம் வருகிறது பிதாமகன் தயாரிப்பாளரான வி.ஏ.துரையின் உடல்நிலை சம்பந்தமான செய்தி. ஏனெனில் தேசிய விருது வரை சென்ற படத்தை எடுத்தவருக்கா இப்படி ஒரு நிலைமை? என்று நினைக்கும் போது தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிதாமகன், கஜேந்திரா, லூட்டி,என்னம்மா கண்ணு போன்ற படங்களை கொடுத்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலைமையில் இருந்தவர் தான் துரை. வரிசையான தோல்விகளை கண்டாலும் அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியே கூட இருந்தவர்களால் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகியதாக துரை கூறியிருக்கிறார்.
சர்க்கரை வியாதி முற்றிய நிலையில் உடன் இருந்தவர்களும் விட்டுப் போக சினிமா சம்பந்தப்பட்ட சில பேர் மட்டும் அவரை இன்று வரை பார்த்துக் கொள்கிறார்கள். நடக்க முடியாமல் தவிக்கும் துரைக்கு சூர்யா ஏற்கெனவே 2.50 லட்சம் கொடுத்த நிலையில் ரஜினியிடம் துரை கேட்டுக் கொண்டதன் பேரில் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ரஜினி கூறியிருக்கிறாராம்.
இந்த நிலையில் ரஜினியை குருவாக கொண்டவரும் தீவிர ரசிகருமான லாரன்ஸும் இப்போது துரைக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். அவரின் மருத்துவத்திற்கும் மற்ற செலவுகளுக்கும் அவரின் சார்பாக 5 லட்சம் தொகையை லாரன்ஸ் கொடுத்ததாக தகவல் வெளியாகி வருகிறது.
இன்னும் சினிமாவில் இந்த மனிதர்களை போல எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களின் நிலை அறிந்து உதவிக்கரம் நீட்டினால் அவர்களின் குடும்பம் கொஞ்சமாவது சந்தோஷமாக இருக்கும் என்று சமுக நல வாதிகள் கூறிவருகின்றனர்.