லிங்குசாமிக்கு கை கொடுக்கும் ராகவா லாரன்ஸ்....கூடவே நம்ம லோகேஷும் சேர்ந்தா எப்படி இருக்கும்?..

by Rohini |
lokesh_main_cine
X

தமிழ் சினிமாவில் ஆவிகளுக்கு பேர் போன நடிகராகவே மாறிவிட்டார் நடிகர் ராகவா லாரன்ஸ். முனி படத்தில் ஆரம்பித்த இவரது ஆவி, பேய் பயணம் முனி பாகங்களாக, காஞ்சனா பாகங்களாகவே வாழ்க்கைப் பயணத்தை ஓட்டி விட்டார்.மேலும் சமீபத்தில் சந்திரமுகி பாகம் 2லும் இவர் தான் ஹீரோ.

lokesh1_cine

வாசு இயக்கத்தில் இரண்டாம் பாகம் தயாராகிறது சந்திரமுகி -2. படத்தில் வடிவேலு, ராதிகா உட்பட பலரும் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தை தொடர்ந்து ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் ருத்ரா படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதையும் படிங்கள் : அக்கட தேச ரசிகர்களை காப்பாற்றிய தனுஷின் அந்த படம்…! பரிதாபத்துக்குரிய நிலையில் தெலுங்கு சினிமா….

lokesh2_cine

இதற்கிடையில் தொடர்ந்து இரண்டு ஃப்ளாப்புகளை கொடுத்த குலுகுலு பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் லாரன்ஸ். படத்தை தயாரிக்க போவது யாரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க. நம்ம லிங்குசாமி தான். அவர் தான் இப்பொழுது தர்மசங்கடமான நிலைமையில் இருக்கிறார். அவருக்கு ஏதாவது உதவு செய்யவேண்டும் என்பதற்காக அவரது தயாரிப்பில் இறங்கபோகிறார் லாரன்ஸ்.

lokesh3_cine

மேலும் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் லாரன்ஸின் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷும் இணைய இருக்கிறாராம். அவர் இந்த படத்திற்காக கதை எழுத உள்ளாராம். ஆக மொத்தம் பேயும் பேயும் இணையும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதையெல்லாம் தாண்டி லாரன்ஸின் அந்த பெருந்தன்மை தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லை என்ற பேச்சு வெளிவருகின்றது.

Next Story