அடுத்த பாலாவாக மாறிய ராகவா லாரன்ஸ்...தயாரிப்பாளர் நிலமைதான் ஐயோ பாவம்....
சினிமாத் துறையில் அடுத்து அடுத்து வரிசையாக ஹாரர் படங்களை கொடுத்து மக்களை எப்போதுமே பீதியில் வைத்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். முனி, முனி -1, காஞ்சனா, காஞ்சனா-2, காஞ்சனா-3 போன்ற படங்கள் எல்லாமே பதற வைக்கும் படங்களாவே அமைந்தன.
இந்த படங்களை அடுத்து லாரன்ஸ் அவர்கள் இயக்கி நடிக்கும் படம் துர்கா. இது காஞ்சனா - 4 என்றே சொல்லலாம். இதுவும் பயங்கரமான ஹாரர் படம் தான் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றனர். இந்த படத்தில் லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தின் ஹீரோயின் பற்றி இதுவரைக்கும் முடிவு பண்ணவில்லையாம். தற்சமயம் ஹீரோக்கு உண்டான சீன்கள் மட்டுமே படமாக்கப் பட்டுக்கொண்டிருக்கிறதாம். இந்த நிலையில் எதுலயும் பக்கா பெர்ஃபெக்ஷனை பார்க்கும் லாரன்ஸ் இந்த படத்தின் 18 நாள்கள் சூட்டிங் முடிந்து அதை போய் போட்டு பாத்தாராம்.
அதில் திருப்தியடையாத லாரன்ஸ் அந்த 18 நாள்கள் நடந்ததை மறுபடியும் ரீ டேக் எடுக்க சொல்லியிருக்கிறாராம். இதனால் படக்குழுவினர் நொந்து போய் உள்ளனர். பெர்ஃபெக்ஷன் பார்க்க வேண்டியது தான் அதுக்காக இப்படியா? ஒரு அளவு வேணாம் என புலம்பி வருகின்றனர்.